பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

களுக்கு ஆசை எழாது. இறைவனைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவனுடைய திருவருளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் ஆசைப்படுவார்கள். அது ஆசையன்று; பக்தி நிலைகளில் ஒன்று. ‘எம்பெருமானே, எனக்கு ஒரு பேராசை இருக்கிறது. அதுஎன்றும் நீங்காமல் என்னிடம் இருக்கிறது’ என்று தொடங்குகிறார் அம்மையார்.

எமக்கு இதுவோ பேராசை; என்றும் தவிராது.

என்ன ஆசை அது "ஒரு நாள் அந்தத் திருநடனக் கோலத்தைக் காண வேண்டும் என்ற ஆசை ஒரு காலைக்கு ஒரு கால் மீதூர்ந்து வருகிறது. ‘நீ குழந்தை; உன்னால் அதைக் காண முடியாது’ என்று சொல்லாதே. ஒருநாள் நீ என் ஆசையை நிறைவேற்றத்தான் வேண்டும். இந்த ஆசையைத் தீர்ப்பார் உலகில் வேறு எவரும் இல்லை. என் விருப்பத்தையெல்லாம் நீதானே நிறைவேற்றி வைக்கிறாய்? ஆதலால் உன்னிடத்திலே விண்ணப்பித்துக் கொள்கிறேன். அந்தத். திருக்கோலத்தை நீ எனக்கு ஒருநாள் காட்டுவாயா?”

எமக்கு ஒருநாள் காட்டுதியோ, எந்தாய்!

"உன்னுடைய திருமேனியே தீயைப் போல விளங்குகிறது. உன்னுடைய திருமுடியிலுள்ள சடாபாரம் அந்தத் தீயின் கொழுந்து போலச் செக்கச் செவேலென்று காட்சி அளிக்கிறது. தீயின் ஒளியை அடக்குவதற்காக நீ அதில் பாய்ந்து ஆடுகிறாயோ? அந்தச் சடாபாரத்தின் ஒளி அக்கினியின் ஒளியையும் அடக்கி விடுகிறது. நெருப்புப் பரவினாற் போலப் புரிபுரியாகத் தோன்றுகிறது அந்தச் சடை.”

அமைக்கவே
போந்து ஏரிபாய்ந் தன்ன புரிசடையாய்!

“இருள் பொங்கித் ததும்பி உலகெங்கும் மூடிக் கொள்வது போல நள்ளிரவு தோன்றுகிறது. அந்தப் பொங்கு இரவில் நீ ஆடுகிறாய். இருள் அடர்ந்து செறிந்திருக்கும்