பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72. வேறுபாடு தெரியாது


காரைக்கால் அம்மையாராகிய குழந்தை இறைவனுடன் விளையாடுகிறது. அது தன் தந்தையின் கழுத்தில் உள்ள மாலையை எடுத்துத் தலையில் வைக்கிறது. அங்கவஸ்திரத்தை எடுத்துத் தலையில் போடுகிறது. தலைப்பாகையை எடுத்துத் தோளில் வைக்கிறது. அது விளையாடுவதைக் கண்டு தந்தையின் மனம் பூரிக்கிறது. அம்மையார் மனத்தால் இப்படி ஒரு விளையாட்டுச் செய்கிறார்.

"அதோ வானத்தில் எழுகிறதே அந்த மதியை எடுத்து அம்பிகையின் திருமுடியில் நீ வைத்தால் இரண்டு சந்திரர்கள் திருமுடியில் தோன்றும். வலப்பாகத்தில் பிறை இருந்தால் அந்தப் பாகம் இறைவன் பாகம் என்று இனம் கண்டுகொள்ளலாம். இரண்டிடங்களிலும் சந்திரன் இருந்தால் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போது எது இறைவன் திருமுடி, எது அன்னையின் திருமுடி என்று தெரியாமல் பிரமை ஏற்படும்.”

இப்படி ஒரு கற்பனைக் காட்சியை எண்ணிப் பார்க்கிறார் அம்மையார்.

இடப்பால வானத்து எழுமதியை நீஓர்
மடப்பாவை தன்அருகே வைத்தால்.

எல்லா இடங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பது வானம். அதனால் அதனை, "அகலிரு வானம்” என்று சொல்வார்கள். ‘பல இடப்பகுதிகளைத் தன்னிடத்தே கொண்ட வானத்தில் எழுந்து தோன்றும் மதியை நீ அம்பிகை உள்ள இடப்பக்கத்தில் வைத்தால் என்ன ஆகும்?’ என்று சிந்திக்கிறார் அம்மையார். அம்மை இளமை மாறாதவள்; என்றும்