பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

449

லாமல் தம் நெஞ்சை நோக்கியே சொல்கிறார். “உள்ளமே!” என்று விளித்துச் சொல்கிறார். உள்ளத்தின் உள்ளே கருத்து இருக்கிறது; இது வேண்டும் அது வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது; அந்த உள்ளத்தை வேறாக வைத்துப் பேசுவதைப் போலச் சொல்கிறார் அம்மையார்.

'உள்ளமே, உனக்கும் கருத்து இருக்கிறது. அது. வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படும் பகுதி அது. அந்தக் கருத்தில் நீ என்ன என்னவோ வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். அவ்வாறு நீ எதைக் கருதினாலும் அதை உடனே பெற்று அதை அனுபவிக்கலாம் என்று தொடங்குகிறார். குழந்தைக்கு ஆசை காட்டுவது போல இருக்கிறது அது.

கருத்தினால் நீ கருதிற்று எல்லாம் உடனே
திருத்தலாம்.

‘இதை ஏதோ கவனக்குறைவாக, போகிற போக்கில் சொல்லி வைப்பதாக எண்ணாதே! நான் திண்ணமாக, உறுதியாகவே சொன்னேன்’ என்கிறார் அம்மையார்.

கிக்கென நான்சொன்னேன்.

உள்ளத்துக்கு இப்போது ஆசை எழுகிறது. கருதினவற்றையெல்லாம் பெற்று அனுபவிக்கலாம் என்றால் அதற்கு உரிய வழியைத் தெரிந்துகொள்ள ஆருக்குத்தான் ஆசை உண்டாகாது?

‘என்ன செய்ய வேண்டும்?’ என்று அது கேட்கிறது.

காரைக்காலம்மையார் அதற்கு உரிய தந்திரத்தைச் சொல்லப் புகுகிறார்.

"சிவபெருமானை உனக்குத் தெரியுமா ? பெரிய அலைகளை வீசி வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தலையில் தாங்கிக் கொண்டவன் அவன். எவ்வளவோ காலமாகக் கங்கைநீர்

நாー29