பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. பொதுவும் சிறப்பும்


உலகத்தில் ஒரு வேடிக்கை நடக்கிறது. சுழல் சக்கரம், சுழன்று கொண்டே இருப்பது போல, உயிர்க் கூட்டங்கள் இங்கே வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றன. ஆண்டுகள் ஆக ஆக, உலகத்தின் ஜனத்தொகை, பெருகிக் கொண்டே வருகிறது. இந்தப் புதிய மக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இதற்கு முன் எங்கே இருந்தார்கள்? நூறு ஆண்டுக் காலத்தில் ஜனத்தொகை இரட்டித்து விடுகிறது. ஜீவர்களும் எங்கே இருந்தார்கள்.

உலகத்தில் உள்ள உயிர்க் கூட்டங்கள், அளவுக்கு அகப்படாதவை. ஜனத்தொகைக் கணக்கு, மனிதர்களின் கணக்கைத்தான் சொல்லுகிறது. மக்களையல்லாமல் எத்தனையோ கோடி கோடி உயிர்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத பூச்சி முதல் மிகப்பெரிய காண்டாமிருகம் வரையில் பலபல பிராணிகள் உலகில் உயிர் வாழ்கின்றன. அந்த உயிர்கள் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. பிறந்தும் இறந்தும் மீட்டும் பிறந்தும் வருகின்றன. அப்படி வருகின்ற சுழற்சியில் அவை, வெவ்வேறு பிறவிகளை எடுக்கின்றன. புழுவாக இருந்த உயிர், மறுபிறவியில் புழுவாகவே பிறக்கும் என்பது இல்லை. வேறு பிராணியாகவோ மனிதனாகவோ பிறக்கலாம். இப்படி மாறி மாறி வரும் பிறப்பின் மிக உயர்ந்தது மனிதம் பிறவி. இப்போது மனிதர்களின் தொகை மிகுதியாக இருக்கிறது. பல வகையான பிராணிகளின் தொகை குறைந்து விட்டது. அந்தப் பிராணிகளின் கணக்கை எடுப்பவர்கள் யார்? எத்தனையோ வகையான விலங்கினங்கள்