பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450


தன் மூதாதையர் என்பின் மேல் பாயவேண்டும் என்று எண்ணித் தவம் புரிந்த பகீரதனின் விருப்பத்தை யாரும் நிறைவேற்ற முன்வரவில்லை. கடைசியில் சிவபெருமானே வெள்ளமாக இரைந்து வந்த கங்கையைத் தன் சடாபாரத்தில் ஏற்று, அங்கிருந்து பகீதரனுடைய மூதாதையர் என்பின் மீது பாயச் செய்தான். யாராலும் நிறைவேற்ற முடியாமல் இருந்த பகீரதனுடைய ஆசையைச் சிவபெருமான் நிறை வேற்றினான்.

பருத்தரங்க வெள்ளநீர் ஏற்றான்

உள்ளம் கேட்கிறது, "நான் என்ன செய்யட்டும்? என்று. 'அந்தப் பெருமானுடைய திருவடிக் கமலத்தியானம் எல்லா விருப்பங்களும் நிறைவேறச் செய்யும். ஆகையால் அந்தப் பாத தாமரைகளை அன்புடன் விரும்பி இடைவிடாமல் அதன் புகழை ஓதிக் கொண்டிரு. அப்போது உன் விருப்பங்கள் நிறைவேறும்” என்கிறார் அம்மையார்.

வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே, எப்போதும் ஓது.

'இறைவனுடைய பாதாரவிந்தங்களின் புகழை ஓதினால் நாம் கொண்ட எல்லா வகையான ஆசைகளும் நிறைவேறுமா? கோடிப் பொன் வேண்டும் என்று எண்ணினால் கிடைக்குமா? பெரிய பதவி வேண்டும் என்று விரும்பினால் பெறலாமா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. ‘கருதிற்றெல்லாம் திருத்தலாம்’ என்று அம்மையார் சொல்கிறாரே! நாம் என்னவோ கருதி ஆசைப்படுகிறோம். அவை யாவும் கிடைக்குமா?

இறைவனுடைய திருவடிக் கமலத்தைத் தியானித்து அதன் புகழைப் பாடத் தொடங்கினால் நம்முடைய உள்ளம் தூய்மை பெறும். எப்போதும் பலவற்றை விரும்பி ஒன்றை விட்டு ஒன்றுபற்றி ஓடுவது மனம். இங்கே உள்ளம் என்றது