பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

451


மனத்தையே. அந்த மனம் கலங்கிய வெள்ளம் கரைகடந்து ஒடும் வெள்ளத்தைப் போல எங்கெங்கோ சுற்றுகிறது. இறைவனுடைய திருவடிக் கமலத்தை விரும்பினால் அந்த ஓட்டம் நிற்க வேண்டும். ஓடும் ஆற்றில் தாமரை மலராது. குளங்களிலும் பொய்கைகளிலுமே அது மலரும். நம்முடைய மனமும் ஓடுதலை நிறுத்தி அவன் அடியை விரும்பித் தியானித்தால் இந்த மனமே சலனமற்ற குளம்போல ஆகிவிடும். உளமென்னும் குளத்தில் இறைவன் திருவடிக்கமலம் தோன்றும். அதைப் புகழ்ந்து புகழ்ந்து தியானம் செய்து தியானம் செய்து நாளடைவில் வரவேண்டிய நிலை இது.

அவனுடைய அடிக்கமலத்தை விரும்பி அதன் புகழை ஒதும் உள்ளத்தில் கண்ட கண்ட ஆசை எழாது. அது தூய்மை பெற்றுவிட்டமையால் அதில் நிறைவேறத்தக்க நியாயமான விருப்பங்களே உண்டாகும். அவை நிறைவேறுவது எளிது; இறைவன் திருவருள் துணையும் கிடைக்கும்போது மிக எளிது.

இறைவனுடைய திருவடியை எண்ணிப் புகழும் உள்ளத்தில் இறைவன் திருவருளைப் பெற வேண்டும், அவன் அருளைப் பெற்ற அடியாரோடு சேரவேண்டும் என்பன போன்ற விருப்பங்களே உண்டாகும். அவை நிச்சயமாக நிறைவேறும். இந்த அனுபவ நிலையை உண்ர்ந்தே அம்மையார், எதைக் கருதினாலும் கிடைக்கும் என்று சொன்னார்.

கருதினால் நீ கருதிற் றெல்லாம் உடனே
திருத்தல்ஆம்: சிக்கென நான்சொன்னேன்—பருத்தரங்க்
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது.

[என் நெஞ்சமே, நீ உன் கருத்துக்குள்ளே எதனை வேண்டுமென்று கருதுகிறாயோ அதனையெல்லாம் உடனே பெற்று நுகரலாம்; இதை உறுதியாக நான் சொன்னேன்; (அதற்கு இதுதான் வழி.) பெரிய அலைகளையுடையதாய் வெள்ளமாகப்