பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452


பரந்து வந்த கங்கைநீரை அடக்கித் தன் தலைப்பாரத்தில் ஏற்றுக்கொண்ட சிவபெருமானுடைய திருவடித் தாமரையை நீ விரும்பி எப்போதும் அவன் திருநாமத்தையும் புகழையும் ஓதிக்கொண்டே இரு.

உள்ளத்துக்கு கருத்து இருப்பதாகச் சொல்வது கவிமரபு. கருதிற்று –தொகுதி ஒருமை, திருத்தலாம்-செவ்வையாக அனுபவிக்கலாம், சிக்கென உறுதியாக, சிக்கெனத் திருத்தலாம் என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம்.

அகங்கார மிகுதியாகி என்னைத் தாங்குவார் யார் என்று 'விண்ணுக்கடங்காமல் வெற்புக்கடங்காமல் வந்த கங்கையாதலின் பருத்தரங்க வெள்ள நீர் என்றார்.

அவன் திருமுடி பரந்து வந்த அலைகளை அடக்கியது போல அவன் திருவடியும் அலைபாயும் மனத்தை ஒருமுகப் படுத்துவது. அப்படி ஒருமுகப்பட்ட மனத்தில் ஆசைகள் எழா. எழுந்தாலும் நிறைவேற்ற முடியாத பேராசைகளாக இரா. எனவே அவை நிறைவேறுவது அரிதன்று. ஓதுதல் — பலகால் சொல்லுதல்.]

இறைவன் திருவடித் தியானத்தால் நாம் விரும்பும் நல்ல எண்ணங்களெல்லாம் நிறைவேறும் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் வரும் 73-ஆவது பாடல் இது.