பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76. சடையும் விசும்பும்


காரைக்காலம்மையார் இறைவன் திருவடிவத்தைக் கண்டு கண்டு மகிழ்கிறவர். அப்படிக் காணும்போதெல்லாம் அவருக்குப் பல வகையான கற்பனைகள் தோன்றுகின்றன. அவனுடைய திருக்கோலத்தில் உள்ள பொருள்களை இணைத்து உவமைகளையும் உருவகங்களையும் புனைகிறார். அவை ஒருவகையில் அணிகளே அல்லவா? அந்த அணிகளைப் புனைந்து புனைந்து மகிழ்ச்சி அடைகிறார்.

இப்போது இறைவனுடைய திருமுடியைப் பார்க்கிறார். அங்குள்ள விரிசடையில் அவர் பார்வை உலாவுகிறது. அந்தச் சடையில் சிவபெருமான் கங்கையைத் தாங்கியிருக்கிறான். வானின்று இறங்கி வந்த கங்கை அது. அந்தத் திருமுடியில் பிறைவிட்டு விளங்குகிறது. செவ்வண்ணச் சடையில் அது அழகாக வெண்ணிலவை வீசிக்கொண்டு ஒளிர்கிறது. அங்கே பாம்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கங்கையையும் மாலையையும் பாம்பையும் ஒரு சேர இணைத்துப் பார்க்கிறார். இப்போது ஒரு கற்பனை உருவாகிறது.

“இந்த விரி சடையை யாம் காணும் போது வானத்தைப் போலத் தோற்றம் அளிக்கிறது” என்று எண்ணுகிறார்.

விரிசடையாம் காணில் விசும்பு.

எவ்வாறு அது வானத்தைப் போலத் தோன்றுகிறது? காரணத்தைச் சொல்கிறார்.

வானத்தில் ஆகாயகங்கை இருக்கிறது. பகீரதன் கங்கையை வருவிப்பதற்காகத் தவம் செய்தான். கங்கை