பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462

ஏபாவம்! பொல்லாவாம்,
அந்தா மரை போல் அடி.

அந்தத் திருவடியின் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழும் அம்மையாருக்கு இப்போது அதன் தோற்றத்தைக் கண்டு உள்ளம் உருகுகிறது. “ஏன் இப்படி ஆயிற்று?” என்று எண்ணிக் கலங்குகிறார்.

“ஓ! இப்போது இப்படி மெலிந்து தழும்பேறியல்லவா தோன்றுகின்றன? எம்முடைய அப்பனே! இது என்ன அலங்கோலம்!” என்று புலம்புகிறார்.

முசிந்து எங்கும்
எந்தாய்! தழும்பேறி ஏபாவம்!
பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி.

“அப்பா என்ன இது! பார்க்கப் பாவமாய் இருக்கிறதே” என்கிறார். அந்தத் திருவடி முழுவதும் தழும்பேறிக் காய்த்துப் போய் இருக்கிறது. நடந்து சென்ற வடுவாக இருந்தால் திருவடியில் உள்ளங்கால் சுவடு பட்டிருக்கும். ஆனால் இது என்ன? திருவடி முழுவதும், ஒவ்வொர் அங்குலமும் தழும்பேறி இருக்கிறதே! என்ன காரணம்?

யோசித்துப் பார்க்கிறாறர் காரணம் விளங்குகிறது. ஊரில் உள்ளவர்களெல்லாம் குழந்தையின் அழகைக் கண்டு எடுத்து முத்தமிட்டு முத்தமிட்டுச் சிவந்திருக்கும் அதன் கன்னங்களைப் போல அல்லவா இந்த அடிகள் இருக்கின்றன? ஆம் தேவர்கள் செய்த காரியத்தால் வந்த வினை இது. வானத்தில் வாழும்படி விதிக்கப் பெற்ற விண்ணோர்கள் இறைவனைத் தரிசித்து விட்டுச் சும்மாவா போகிறார்கள்? அவனுடைய திருவடியில் விழுந்து விழுந்து வணங்கி விட்டுச் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் முடியை அவன் கால்களில் வைத்து வணங்குகிறார்கள். அவர்கள் தலையில் முடி