பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



465

தேய்கின்றன. ஒளியுடைய மணிகள் ஆனாலும் ஸ்பரிசித்தற்குக் கல்லைப் போல வன்மையுடையனவாக இருக்கின்றன.

திருக்கோயிலில் உழவாரத் திருப்பணியை நாவுக்கரசர் செய்து வந்தபோது இந்திரன் அவரைச் சோதிப்பதற்காக அவர் தொண்டு செய்த பிரகாரத்தில் பொன்னையும் மணியையும் இட்டான். அவற்றை மற்றவர்கள் கண்டால் உடனே எடுத்துச் சேமித்து வைப்பார்கள். ஓடும் கல்லையும் ஒக்கவே நோக்கும் திருநாவுக்கரசர் அவைகளும் வலம் வரும் அடியார்களின் அடிகளில் உறுத்துமே என்று கல்லையும் மண்ணையும் ஒதுக்குவதுபோல, உழவாரத்தால் தள்ளினராம். இந்த வரலாறு இங்கே நினைவுக்கு வருகிறது.

தேவர்களின் மகுடத்திலுள்ள மணிகள் நம் கண்களுக்கு ஒளியும் அழகும் உடையனவாகத் தோன்றினாலும் இறைவன் திருவடிகளுக்குத் துன்பம் தருகின்றவையே. அந்தத் திருவடிகளில் தேய்ப்பதனால் தழும்பை உண்டாக்குபவை. எங்கும்—திருவடி முழுவதும். ஏ, பாவம்: இரண்டும் இரக்கக் குறிப்பு. ஏறி-ஏற; எச்சத்திரிபு. பாவம் என்பது புண்ணியத்தின் மறுதலையைக் குறிக்காமல் இரக்கத்தை வெளியிடுவதாக நிற்கிறது; குறிப்புச்சொல். பொல்லா—நலமாகிய அழகை இழந்து காணப் பொறுக்காத தோற்றத்தை உடையன.

அடி, விண்ணோர் பணிந்து தேய்ப்ப, முசிந்து, ஏறி, பொல்லாவாம் என்று வினை முடிவு செய்க.]

இறைவனுடைய திருவடிகளைக் கண்டு இரங்குவதைப் போல, அவனுடைய தனித் தலைமையைப் புலப்படுத்துகிறது இந்தப் பாட்டு. இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 76-ஆம் பாடல்.