பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

471


‘பேயோடு ஆடும் இவன் நமக்கு என்ன தரப்போகிறான்?’ என்று எண்ணக்கூடாது. நிலையாமையை நினைப்பூட்டும் புனிதமான இடம் மயானம். அங்கே அவன் எல்லாரையும் சந்திப்பதற்காக ஆடிக்கொண்டிருக்கிறான்.

அவனுடைய சூழ்நிலையைக் கண்டு நாம் ஏமாறக் கூடாது. அவன் நம்மிடம் இரக்கம் கொண்டு அருள் செய்யப் புகுந்தானானால் பிறரால் வழங்க முடியாதவற்றையெல்லாம் வழங்குவான்.

இந்தக் கருத்தைக் காரைக்கால் அம்மையார் தம் நெஞ்சத்தைப் பார்த்துச் சொல்கிறார். 'அறிவில்லாத ஏழை நெஞ்சே!' என்று விளித்துக் கூறுகிறார்.

ஏழாய்!

தமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிற நெஞ்சைப் பார்த்துத்தான் அப்படிச் சொல்கிறார். தம் நெஞ்சுக்குக் கூறுவது போலப் பல இடங்களில் அவர் பாடியிருக்கிறார்.

அந்தப் பெருமானுடைய திருவுள்ளத்தில் இரக்கம் உண்டானால் நமக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் ஏதும் செய்யாமல் உலகியலில் ஈடுபட்டு உழலும் நம்மிடம் அவன் இரக்கம் கொள்ளமாட்டான். வேலை செய்யாமல் கூலி கொடுத்தால் சோம்பேறி ஆகிவிடுவோம். ஆதலால் அவன் நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால், வாளா இரங்கமாட்டான்.

வாளா இரங்குமோ!

உயிர்க் கூட்டங்கள் பல. அவற்றின் வினைக்கு ஈடாக இன்ப துன்பங்களை ஊட்டுபவன் அவன். அவர்களுக்குள் சிறப்பான முயற்சி செய்பவர்களிடம் அவனுக்கு இரக்கம் மிகுதியாகும். அவர்களுக்குச் சிறப்பான அருளை வழங்குவான். நன்றாகப் படித்துத் தேர்வு எழுதியவனுக்கு ஆசிரியர் அதிகப் புள்ளி வழங்குவார். மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறுபவர்