பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472

களுக்குப் பரிசுகளும் கிடைக்கும். எல்லாருக்குமே தேர்ச்சிக்குரிய புள்ளிகளை வழங்கினால் பிறகு கல்விக்கு என்ன மதிப்பு உண்டாகும்?

முயற்சி கல்லாதவர்களுக்கு ஒன்றை வழங்கினால் அவர்களுக்கு அதன் அருமை தெரியாது. ‘தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை; உரையும் இல்லை’ என்பது பழமொழி. ஆகவே அவன் எல்லா உயிர்களுக்கும் இரங்குவதில்லை.

வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும்?

ஆகவே நம்மிடம் அவனுக்கு இரக்கம் உண்டாகும் வகையில் நாம் முயற்சி பண்ணவேண்டும். அவனைச் சரணடைந்து, ‘எனக்கு அருள் செய்யவேண்டும்’ என்று பணிந்து இரக்க வேண்டும். ஒருமுறை விண்ணப்பித்தால் போதாது. பலகாலும் அடுத்தடுத்துப் பணிந்து இரக்கவேண்டும். அப்போது தான் நம்முடைய உண்மையான அன்பு புலப்படும். பணம் படைத்தவனிடம் வறியவன் எத்தனை முறை சென்று எப்படி எப்படியெல்லாம் பணிந்து கெஞ்சி வேண்டுகிறான்!

உண்மையான அருட்பசி உடையவர்கள் இறைவனைப் பலகாலும் பணிந்து வழிபட்டு வேண்டுவார்கள்.

"பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார்
பாவம் போக்க கிற்பானை:

என்று அப்பர் சுவாமிகள் பாடுவார்.

அவ்வாறு பலகாலம் பணிந்து இரந்தால் இறைவன் திருவுள்ளம் நெகிழ்வான்; இரங்குவான்.

பன்னாள் இரந்தாற் பணிந்து.