பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474


ஆகவே அவன் உள்ளத்தில் இரக்கம் சுரக்கும்படி நாம் பன்னாள் பணிந்து இரக்கவேண்டும். அப்போதுதான் எல்லாம் கிடைக்கும். ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்தால் அவன் சும்மா இரங்க மாட்டான்.

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும்? ஏழாய்!—இரங்குமேல்
என்ஆக வையான்தான்? எவ்வுலகம் ஈந்தளியான்?
பன்னாள் இரந்தாற் பணிந்து.

அந்வயம்: ஏழாய், பேய்க்காட்டில் அரங்கமா ஆடுவான் எவ்வுயிர்க்கும் வாளா இரங்குமோ? பன்னாள் பணிந்து இரந்தால், இரங்குமேல், தான் என்னாக வையான்? எவ்வுலகம் ஈந்து அளியான்?

அறிவற்ற நெஞ்சே, பேய்களை உடைய சுடுகாட்டில் அதையே அரங்கமாகக் கொண்டு நடனமிடும் சிவபெருமான் தராதரம் பாராமல் எல்லா உயிர்களுக்கும் வாளா இரங்குவானோ? மாட்டான். அவனைப் பல காலம் வணங்கி வழிபட்டு விண்ணப்பித்துக் கொண்டால் இரங்குவான்; அவ்வாறு இரங்குவானாயின் அவன் நம்மை எந்தப் பதவியிலுள்ளவராகத் தான் வைக்கமாட்டான்? எந்த உலகத்தைத்தான் வழங்கிக் காப்பாற்ற மாட்டான்?

[அரங்கம்—நடனமாடும் இடம். பேய்க்காடு—பேய்களை உடைய சுடுகாடு. ஆடுவான் என்பதால் சிவபெருமான் என்பது புலப்பட்டது. வாளா — தராதரம் பாராமல், சும்மா இரங்குமோ: வினா எதிர்மறைப் பொருளில் வந்தது; இரங்கான் என்னும் பொருளைத் தந்தது. எவ்வுயிர்க்கும் — பல தரப்பட்ட பக்குவங்களையுடைய எல்லா உயிர்களுக்கும். ஏழாய். நெஞ்சை விளித்துச் சொன்னது. ஏழையாக உள்ள உனக்கு எல்லாப் போகமும் கிடைக்கும் என்று நயம்படச் சொன்னபடி.

‘பணிந்தால் இரங்குவான்; இரங்கினால் இவற்றையெல்லாம் வழங்குவான்’ என்றார். என் ஆக — எந்த நிலையில்