பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

477

 “அச்சம், தளர்ச்சி, சோர்வு ஆகியவை எல்லாம் மனத்தில் எழுபவை. எம்முடைய சிந்தையில் அவை எழுவதில்லை. எம் சிந்தையார் செருக்குடன் இருக்கிறார்."

அவருடைய பெருமிதம் தம்முடைய மனத்தையே உயர்த்திப் பேசச் செய்கிறது. 'சிந்தையார்' என்று மதிப்புடன் பேசுகிறார். அந்தச் சிந்தையாரிடத்தில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

சிந்தையார்க்கு உற்ற செருக்கு.

"இந்தச் செருக்கு உங்கள் சிந்தையார்க்கு எவ்வாறு வந்தது?”

"எல்லாம் வல்ல எம் தந்தையாருக்கு அடிமைப்பட்டு வாழும் நல்வாழ்வு நமக்குக் கிடைத்திருக்கிறது. அது காரணமாகத்தான் இந்தச் செருக்கு வந்திருக்கிறது."

"பணத்தாலும் அறிவாலும் உடல் வலிமையாலும் சிறந்து நிற்பவர்கள் செருக்குடன் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்தச் செருக்கு நிலையாக நிற்பதில்லை. செல்வம் சகடக்கால் போல வரும். ஒருகால் வளம் பெற்றோர் மற்றொரு கால் வளம் சுருக்கிச் செருக்கழிந்து நிற்கிறார்கள். அறிவிற் சிறந்தவர்களும் தம் அறிவெல்லைக்கு அகப்படாத பொருளைப் பற்றிச் சிந்திக்கும்போது தடுமாறுகிறார்கள். அப்போது அவர்கள் செருக்கு எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது. உடல் வலிமை பெற்றவர்கள் ஆண்டு முதிர முதிர அந்த வலிமையை இழந்து விடுகிறார்கள். அப்போது முன்பு இருந்த மிடுக்கு இருப்பதில்லை. மிகப் பெரிய செல்வரை உற்ற தோழராகக் கொண்டவர்கள் அந்தச் செல்வர் மனம் மாறினாலும், அவருடைய செல்வம் குறைந்தாலும், அவர் உலக வாழ்வை நீத்தாலும் அவரால் பெறும் நன்மையை இழந்து வாடுகிறார்கள். எப்போதும் ஒரே நிலையில் செருக்கோடும் மிடுக்கோடும் வாழ்பவர்களைக் காண்பதில்லை. அப்படி இருக்க