பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

நீங்கள் செருக்குக் குலையாத சிந்தையுடன் இருக்கிறீர்களே; அது எப்படி?"

"அதற்குக் காரணம் இதுவாக இருக்குமோ?"

இதுகொலோ
சிந்தையார்க்கு உள்ள செருக்கு?

"எது?"

“எம் தந்தையாராகிய சிவபெருமானுக்கு ஆளாகப் பெற்ற வலிமையாகத்தான் இருக்க வேண்டும்."

"எவ்வாறு ஆட்பட்டீர்கள்?"

"உலகத்தில் மற்றவர்களைப் பற்றினால் பயன் ஒன்றும் இல்லை என்பதை அநுபவத்தில் அறிந்து, வேறு ஏதும் பற்றின்றி, எம் தந்தையாரைப் பற்றிக்கொண்டு ஆளாக நின்று தொண்டு செய்யப்பெற்றோம். அதையன்றி வேறு வழியில்லை என்று துணிந்து, அந்த அடிமைத் தன்மையில் என்றும் பிறழாது நிற்கிறோம். இதுதானோ இந்தச் சிந்தையாருக்கு உண்டான செருக்குக்குக் காரணம்?"

துணிந்துஎன்றும்
எந்தையார்க்கு ஆட்செய்யப்
பெற்ற இதுகோலோ
சிந்தையார்க்கு உள்ள செருக்கு?

"எவ்வாறு ஆட்பட்டுத் தொண்டு செய்தீர்கள்?"

"படர்ந்த சடையை உடைய எம் தந்தையாரை அணுகினோம். அவரைப் பணிந்தோம். அவருடைய திருவடிகளை மலரால் அருச்சித்து மலர்மாலைகளை வேய்ந்து அலங்காரம் செய்தோம்."

பணிந்தும் படர்சடையான்
பாதங்கள் போதால்
அணிந்தும்