பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482

சிந்தையார் என்றது, 'இத்தகைய நன்மனத்தைப் பெற்றோமே!' என்ற உவகையால் அஃறிணை ஒருமையை உயர்திணைப் பன்மை வாய்பாட்டால் குறித்தபடி. தமக்குச் செருக்கு உண்டானதாகச் சொல்லாமல் அதனைச் சிந்தையின் மேலேற்றிச் சொன்னார், பணிவு காரணமாக.

செருக்கு—செருக்குக் காரணம்; ஆகு பெயர்.

'படர்சடையான் பாதங்கள் பணிந்தும், அணிந்தும் துணிந்து ஆட்செய்யப் பெற்ற இது கொலோ உள்ள செருக்கு' என்று இணைத்துப் பொருள் கொள்க.

படர்சடையான் என்றதன் பின் எந்தையார் என்று சொன்னதில் அவ்வெந்தையார் என்ற சுட்டுத் தொக்கு நின்றது.

இறைவனுடைய அடியார்கள் எதனாலும் தளர்வின்றிப் பெருமிதத்தோடு இருப்பார்கள் என்பது இதனாற் பெறப்படும் கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் உள்ள 79-ஆவதுபாடல் இது.