பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484

திருத்தக்க
மால்அயனும் காணாது
அரற்றி, மகிழ்ந்து ஏத்த

காணாமல் வருந்திய அவர்களுக்கு இறைவனே இரங்கித் தன் திருவடியைக் காட்டினான். முதலில் வருந்தியதனால் அவற்றின் அருமைப்பாட்டை அறிந்த அவர்கள், இறைவன் கருணையினால் அந்தத் திருவடிகளின் தரிசனம் கிடைத்தபோது அவர்கள் உள்ளம் மகிழ்ந்தார்கள்; தம் அகந்தையை மறந்து இறைவன் கருணை காட்டினானே என்று எண்ணி ஏத்தினார்கள்.

குழந்தை தன்னைத் தேடட்டும் என்று அன்னை மறைந்து கொள்ளுகிறாள். அந்தக் குழந்தை தாயை எங்கெங்கோ தேடுகிறது. தேடித் தேடி அலுத்துப் போய் அரற்றுகிறது. அப்போது தாய் வெளிப்பட்டுக் குழத்தையின் முன் நிற்கிறாள். தேடி வருந்திய குழந்தைக்கு அளவற்ற மசிழ்ச்சி உண்டாகிறது.

அத்தகைய மகிழ்ச்சி மாலுக்கும் அயனுக்கும் உண்டாயிற்று. அந்த மகிழ்ச்சியின் விளைவாக அவர்கள் இறைவனை ஏத்தித் துதித்தார்கள்.

அவர்கள் ஏத்தும்படி விளங்கும் இறைவன் திருவடி, காலனையே உதைத்தது. அவன் மிடுக்குடன் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்தான். தன் பாசத்தை அவன்மேல் வீசினான். சிவலிங்கப் பெருமானையும் சேர்த்துப் பாசத்தால் அகப்படுத்தினான், அப்போது அந்தக் காலனுடைய ஆற்றல் தோற்றுப் போகும்படி அவனை உதைத்தது இறைவன் திருவடி அது காலஜயம் கொண்ட திருவடி.

அத்தகைய பராக்கிரமத்தைச் செய்த திருவடியே மற்றொரு செயலையும் செய்தது.

இராவணன் தன் விமானத்தில் ஏறி வரும்போது அந்த விமானம் கைலாசத்தின் மேல் சென்றது. அப்பால் அதனால்