பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

487

காலனையும்: எதிரது தழீஇய எச்சவும்மை; உயர்வு சிறப்பாகவும் கொள்ளலாம். வென்று உதைத்த என்பவற்றை உதைத்து வென்ற என்று மாற்றிப் பொருள் செய்க. உதைத்த கால் அடர்த்த என்று முடிக்க.

காணாது அரற்றி மகிழ்ந்து ஏத்த, வென்று உதைத்த கால் அடர்த்த என்று வினை முடிவு கொள்க.

ஏத்தியது ஒரு சமயம்; உதைத்தது வேறு ஒரு சமயம்; அடர்த்தது பின் ஒரு சமயம். இந்த மூன்றும் திருவடிகளின் செயல்களாதலின் இணைத்துச் சொன்னார்.]

அற்புதத் திருவந்தாதியில் 80-ஆம் பாட்டாக அமைந்தது இது.