பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490

எய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

சிவபெருமான், அல்லாதவர்களை ஒறுப்பதற்கு வெவ்விய தீயைக் கக்கும் அம்பை வைத்திருக்கிறான். தன்னைச் சார்ந்து பணிபவர்களுக்குத் தண்மையான தாமரைகளைப் போன்ற திருவடிகளை உடையவனாக இருக்கிறான். கையிலே தீ அம்பு; காலிலே தாமரை போன்ற தண்மை. இறைவன் திருவடியையே புகலாகப் புகுந்தவர்களுக்கு உடலும் உள்ளமும் உயிரும் குளிரும். மூன்று தாபங்களால் உண்டாகும் வெப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை.

இறைவனுடைய சரணாரவிந்தங்களைச் சார்ந்தமையால் அவர்களுக்குக் கிடைக்கிற நன்மை என்ன?

அவர்கள் காலனுக்கு அஞ்சமாட்டார்கள். அவனை வென்று விடுவார்கள். ‘காலனையும் வென்றோம்’ என்று செம்மாப்பார்கள்.

மக்கள் இறந்தால் அவர்களை அழைத்துச் செல்லக் காலனும் அவனுடைய தூதுவர்களும் வருவார்கள். சிவபெருமானுடைய அன்பர்களின் அருகில் வரக் காலன் அஞ்சுவான். அவர்கள் எந்தத் திருவடியைப் பற்றியிருக்கிறார்களோ அந்தத் திருவடி அவனை உதைத்து விழச்செய்தது. அதை அவன் மறந்து விடுவானா? பக்தர்கள் இறந்தால் அவர்களைச் சிவகணங்கள் வந்து சிவலோகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். காலனுடைய கொடுமை அன்பர்களுக்கு இராது. அவர்கள் காலஜயம் பண்ணியவர்கள்.

காலனையும் வென்றோம்.

காரைக்காலம்மையார் தம்மையும் தம்மைப் போன்ற அன்பர்களையும் எண்ணித் தன்மைப் பன்மையால் பாடுகிறார். இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்ட பெருமிதத்தால்