பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

491

இவ்வாறு மிடுக்குடன் சொல்வதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

சாமான்யமானவர்கள் இறந்தால் அவர்கள் செய்த, புண்ணிய பாவங்களுக்கு ஏற்றபடி மறுமை வாழ்வு அமையும். பாவங்களுக்கு உரிய தண்டனையை ஏற்பதற்கு நரகத்தை அடைவார்கள். இறைவனுடைய அடியார்களுக்குக் காலபயமே இல்லாதபோது நரகாநுபவம் எப்படி உண்டாகும்? ஆகவே அவர்கள், நரகம் உள்ள திசையைக்கூடப் பார்க்க மாட்டார்கள். அவற்றினின்றும் நெடுந்துரம் விலகிச் செல்வார்கள்.

கடுநரகம் கைகழன்றோம்.

இந்த உலகத்தில் வாழும்போதே இறைவனுடைய திருவருளநுபவ உறைப்பினால் சீவன் முக்த நிலையை அடைந்தவர்கள் அடியார்கள். ஆதலின் இங்குள்ளபோதே, எமக்குக் கால பயம் இல்லை; காலஜயந்தான் உண்டு. நரகாவஸ்தை எமக்கு இல்லை. அவை இருக்குமிடத்துக்கும் எமக்கும் நெடுந்தூரம் என்ற உறுதி அவர்களுக்கு உண்டாகிவிடுகிறது.

வினைகள் மூன்று வகை. பல பிறவிகளில் சேமித்து ஈட்டிய புண்ணிய பாவங்களாகிய கர்மங்கள் மூட்டையாக நம் கணக்கில் இருக்கின்றன. அந்த வினைத் தொகுதிக்குச் சஞ்சிதம் என்று பெயர். சஞ்சி-மூட்டை. பல பிறவிகளில் ஈட்டிய வினையாதலின் அவை முழுவதையும் ஒரே பிறவியில் அநுபவித்துக் கழிக்க முடியாது. ஆகையால் இறைவன் அத்தொகுதியில் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அநுபவித்துத் தீர்க்கட்டும் என்று ஆணையிட்டு அனுப்புகிறான். அதற்குப் பிராரப்தம் என்று பெயர்; அதனையே ஊழ்வினை என்று சொல்கிறோம்.

அடியவர்கள் பிராரப்த வினையின் பயனாக அநுபவிக்க வேண்டியவற்றை அநுபவித்துவிட்டு இறைவனை அடை