பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

503

‘நின்னது திகழ்ஒளி சிறப்பிருள் திருமணி’

என்று பரிபாடல் கூறும்.

பொற்குன்றும் நீலமணிக்குன்றும் இணைந்து ஒன்றி நின்றால் எப்படி இருக்கும்? மாலிருக்கும் பாதியனாகிய சங்கரநாராயணப் பெருமான் அவ்வாறு காட்சியளிக்கிறான். செம்பொற் குன்றுடன் நீலமணிக்குன்று பாதி பாதியாக இணைந்து நின்றால், ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட வண்ணம் உடைமையால் இரண்டும் நன்றாக விட்டு விளங்கும்.

சிவபெருமான் தனக்குள் திருமாலை அடக்கிக் கொள்ளாமல் இப்படி இணைந்து நிற்கும்போது, அப்பெருமானும் பளிச் சென்று தோன்றுகிறான்; திருமாலும் விளக்கமாகக் காட்சி அளிக்கிறார்.

அவ்விருவரும் உயர்ந்து ஓங்கி நிற்கும்போது அந்த இரண்டு குன்றுகளும் ஓங்கி உயர்ந்து நிற்பது போன்ற எழிற் காட்சி தோன்றும்.

தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாம்உடனே
நிற்கின்ற போலும் நெடிது
.

மேருமலையும் நீலகிரியும் இணைந்த தோற்றம் உலகில் இல்லாதது. ஆகவே இது இல்பொருள் உவமை. இரண்டு கண்களாலும் அந்தத் திருக்காட்சியை மாறி மாறிப் பார்க்கலாம். சிவபக்தி உடையவர்கள் அப்பெருமானை முதலில் பார்த்து அவனோடு இணைந்திருக்கும் திருமாலையும் சேவிக்கலாம். திருமாலன்புடையவர்கள் திருமாலைப் பார்த்து அப்படியே சிவபெருமானையும் தரிசிக்கலாம்.


மின்போலும் செஞ்சடையான்
மாலோடு மீண்டுஇசைந்தால்
என்போலும் காண்பார்கட்கு
என்பீரேல்—தன்போலும்