பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504

பொற்குன்றும் நீல மணிக்குன்றும்
தாம்உடனே
நிற்கின்ற போலும் நெடிது.

மின்னலைப் போன்ற செம்மையையுடைய சடையையுடைய சிவபிரான் திருமாலோடு, பிரிந்து நில்லாமல் மீண்டு ஒன்றி இணைந்து நின்றால், ‘அந்தக் கோலம் தரிசிப்பவர்களுக்கு எதைப் போல இருக்கும்?’ என்று கேட்பீர்களானால், சிவபிரானைப் போன்றுள்ள பொன்மலையும் நீலமணிக்குன்றும் உடன் ஒன்றி உயர்ந்து நிற்கின்றதைப் போல இருக்கும்.

[மின்-மின்னல். மால்-திருமால். காண்பார்கட்கு என் போலும் என்றிரேல், தன் என்றது சிவபிரானை. மணி என்பது எல்லாவகை மணிகளையும் குறிப்பதாதலின் தெளிவாகத் தெரியும் பொருட்டு நீல மணிக்குன்று என்றார். தாம்: அசை, உடனே—ஒருங்கே. நிற்கின்ற; நிற்கின்றது என்ற தொழிற்பெயர் ஈறு குறைந்து நின்றது; செய்யுள் விகாரம். நிற்கின்றவை என்று வினையாலணையாகவும் கொள்ளலாம். என்றிரேல் பொற்குன்றும் மணிக்குன்றும் நெடிது நிற்கின்ற போலும் என்று கூட்டுக. நெடிது-உயரமாக. நீண்ட காலம் என்றும் கொள்ளலாம்.]

அற்புதத் திருவந்தாதியில் உள்ள 83-ஆவது பாட்டு இது.