பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506

காரைக்கால் அம்மையார் இப்போது விழித்து எரித்ததாகச் சொல்ல வருகிறார். நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்து மன்மதனை எரித்ததாகச் சொல்வது ஒரு வரலாறு. அதே நெற்றிக் கண்ணால் திரிபுரங்களை அழித்தான் என்ற வரலாறும் உண்டு.

ஆனால் அம்மையார், மூன்று புரங்களையும் தன்னுடைய மூன்று கண்களாலும் பார்த்து எரித்தான் என்ற செய்தியைச் சொல்கிறார். இறைவனுடைய மூன்று திருவிழிகளைப் பற்றிச் சிந்திக்கும்போது இந்தப் பராக்கிரமச் செயலைக் குறிப்பிடுகிறார்.

நல்லவர்களுக்கெல்லாம் பகைவர்களாக இருந்தார்கள் திரிபுரத்தின் தலைவர்கள். பிறருக்குக் கொடுமை உண்டாகும்படி அந்தப் புரங்களைப் பறக்கவிட்டுப் பிறகு நிலத்தின் மேல் படியச் செய்தார்கள்.

கொடிதுஆக
விண்டார்கள் மும்மதிலும்.

அந்த மூன்று புரங்களையும் கோபத்தினால் எரிக்கும் தன் மூன்று விழிகளாலும் பார்த்தான் சிவபெருமான். அந்தக் கண்களிலிருந்து தோன்றிய கனலால் மூன்று புரங்களும் எரிந்தன. அந்தக் கண்கள் அந்தப் புரங்கள் எரிவதைக் கண்டு அருளினால் பிறழ்ந்தன; அசைந்தன; ஆயின.

கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும்
வெந்தீ யினில்அழியக்
கண்டுஆலும் முக்கணான் கண்.

அந்த மூன்று கண்களை நினைக்கிறார் அம்மையார். சூரிய சந்திர அக்கினிகளை முச்சுடர் என்பார்கள். இந்த மூன்றும் ஒளியைத் தருவன. கதிரவன் பகலிலும் சந்திரன் இரவிலும்