பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

நெடிதாய பொங்கு எரியும்.

குளிர்ந்த நிலவை வீசும் தண்ணிய மதியும் அவனுக்கு ஒரு கண்.

தண்மதியும்

நேர் நின்றால் கடுமையாகச் சுடும் கிரணங்களை வீசும் கதிரவனும் ஒரு கண்.

நேரே
கடிதாம் கடுஞ்சுடரும் போலும்

மும்மதில்களையும் சுட்ட மூன்று கண்களும் எப்போதும் எரியைக்கக்குவன அல்ல. அவை தத்தமக்கு உரிய இயல்போடு இருப்பவை, இறைவன் சினம் மூண்டு பார்க்கும்போது அவை மூன்றும் ஒரே திறத்தனவாக எரியைக் கக்கிச் சங்காரச் செயலுக்குக் கருவியாக இயங்குகின்றனவாம்.

நெடிதாய பொங்கெரியும்
தண்மதியும் நேரே
கடிதாம் கடுஞ்சுடரும்
போலும்;—கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும்
வெந்தீ யினில்அழியக்
கண்டுஆலும் முக்கணான் கண்.

கொடுமை உண்டாக மற்றவர்களினின்றும் பிரிந்து சென்று பகைவர்களாக இருந்த திரிபுரத் தலைவர்களுடைய மூன்று மதில்களும் வெம்மையான தீயினால் அழியும்படி பார்த்து, அவை அழிந்தபிறகு மகிழ்ந்த முக்கண்ணனாகிய சிவபெருமானுடைய கண்கள், உயர்ந்ததாகிய கொழுந்துவிடும் தீயையும், குளிர்ச்சியையுடைய சந்திரனையும், நேரே கடுமையாக உள்ள வெய்ய கதிரவனையும் போல இருக்கும்.