பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

509

[நெடிது ஆய—உயர்ந்ததாகிய, நெருப்பு மேல்நோக்கி எரிதலின் இவ்வாறு சொன்னார். பொங்கு எரி—கொழுந்து விட்டு எரியும் தீ. வேறு சுடர்களினும் நீக்குவதற்குக் கடுஞ்சுடர் என்றார். கடிதாம் கடுஞ்சுடர் என்று இரண்டு முறை சொன்னது அதன் கடுமை மிகுதியைச் சொன்னபடி. கடுஞ்சுடர் என்பதைச் சூரியன் என்னும் துணையாக நின்றது என்று கொண்டு பொருள் செய்வதும் பொருந்தும்.

‘கண் எரியும் மதியும் கடுஞ்சுடரும் ஆம்’ என்று பயனிலையை வருவித்து முடித்து, ‘போலும்’ என்பதை அசையாகக் கொள்வதும் ஒன்று. கொடிது ஆக விண்டார்கள்; விண்டார்கள் என்பது பகைவர்களைக் குறிக்கும் சொல். இங்கே கொடிது ஆகும்படி பிரிந்து, பகைத்தவர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்; கொடிதாகக் கண்டு என்று கூட்டி முடிப்பதும் பொருந்தும். வெந்தீ-ஐம்பூதங்களில் ஒன்றாகிய தீயைப் போலன்றி மிகக் கொடிதாகிய தீ. திரிபுரங்களின் ஆற்றல் மிக்கதாதலின் அதை அழிக்கும் வெம்மையை உடைய தீ ஆயிற்று.

கண்டு ஆலும்; முதலில் பார்த்து அழித்து அதன்பின்பு புரங்களை அழித்த பெருமிதத்தால் பிறழ்ந்தன. ஆலுதல்—அசைதல்: பிறழ்தல்; களித்தல் என்றும் கூறலாம். முக்கணான் என்பது சிவன் என்னும் துணையாய் நின்றது. ‘முக்கணாம் கண்’ என்பது ஒரு பாடம்.

‘கண் போலும்’ என்று முடிக்க.]

இறைவனுடைய மூன்று கண்களின் இயல்பைக் சொன்ன இந்தப் பாடல் அற்புதத் திருவந்தாதியில் 84-ஆவது செய்யுளாக அமைந்தது.