பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

513

எண் ஆர எண்ணத்தால் எண்ணியும்.

தொழுது தியானித்து இன்புற்றல் அந்த இன்ப உணர்ச்சி பொங்கி வரும். அதனால் நம்மை அறியாமலே வாய் திறந்து அந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவோம். இன்ப உணர்ச்சி மிகும்போது நாம், "அம்மாடி! அப்பாடி!" என்று சொல்வோம். வயிறார உண்டவன் ஏப்பம் விடுவது போல அத்தகைய சொற்கள் நம் வாயினின்று எழும்.

ஆனால் அன்பர்கள் இன்ப உணர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் போது அவர்கள் வாயிலிருந்து இறைவன் திருநாமங்களே எழும். அவனுடைய பெருமையை எண்ணி அந்தம் பெருமையை விளக்கும் திருப்பெயர்களே உணர்ச்சி மிகுதியினால் அவர்கள் சொல்லுவார்கள். அம்மையார் எவ்வாறு சொல்வார்?

தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவன் அவன்; மகாதேவன். அவனை வாயார வாழ்த்த புகுந்து,

விண்ணோன்

என்பாராம். அவன் தீயினில் நின்று ஆடும் திறனுடையோன். அவன் திருமேனி தீயைப் போன்றது. பெருந்தீப்பிழம்பாகிய அவனுக்கு இந்தப் பெளதிகத் தீச் சுடாது. அது புனல் போலக் குளிர்ந்திருக்கும். அதை எண்ணி,

எரியாடி

என்பாராம். இப்படி ஒரு முறையா சொல்வார்? இன்ப உணர்ச்சி மிகும்போது ஒரு சொல்லையே மீட்டும் சொல்வது மனித இயல்பு. அரிய நண்பர் வருவதைக் கண்டால் பலமுறை, "வா, வா, வா, வா” என்று சொல்லுவோம். எதையாவது கேட்டு மகிழ்ந்தால், “பேஷ்! பேஷ் பேஷ்!” என்று பல முறை சொல்வோம்.

அம்மையாரும், ‘விண்ணோன், எரியாடி’ என்று ஒரு முறை சொல்வதோடு நிற்கமாட்டார். பலமுறை திரும்பத்

நா—33