பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518

“இந்த நிலை எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? இது மாறினாலும் மாறலாமே! அப்போது என்ன செய்வீர்கள்?”

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

“பேரின்ப வாழ்வு ஒன்று இருக்கிறதே!”

“இந்த நிலை எமக்குத் தங்கியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப்பற்றி எமக்குக் கவலை இல்லை. இறைவனுடைய திருவுள்ளம் எப்படியோ அப்படியே நடக்கட்டும். வேறு நிலையே எமக்கு வேண்டாம்.”

வேண்டேம், நமக்குஈது
உறினும் உறாதொழியு மேனும்.

“இறைவனுடைய திருவருளினால் சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய நிலைகளெல்லாம் கிடைக்குமே! அவற்றை விட்டு விட்டு இந்தப் பேயுருவத்தோடு இருப்பானேன்?”

“வேறு எதைப் பெற்றாலும் அதை யாம் வேண்டோம். இந்த நிலையே போதும். அவனடிக் கீழிருந்து அவனுடைய நடனத்தைத் தரிசித்து இன்புறுவதைவிட வேறு ஒன்றும் எமக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.”

இறைவனோடு ஒன்றும் நிலை மிகச் சிறந்ததாயிற்றே! நீங்கள் விரும்பினால் இறைவன் அருளால் பெறலாமே!”

“அப்படி பெற்றாலும் யாம் அதை வேண்டோம்.”

பெறினும் பிறிதியாதும் வேண்டேம்.

திருவாலங்காட்டில் நடராசப் பெருமான் திருவடிக்கீழ்ப் பேய் வடிவோடு என்றும் இருக்கிறார் அம்மையார். அந்த நிலையிலேயே இணையற்ற இன்பம் கண்டு,

“கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி
வீடும் வேண்டா விறவின் விளங்கினார்”