பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88. எப்படி அடும்?


இறைவனை வழிபடுபவர்கள் பல வகையில் வணங்கி இன்புறுவார்கள். அவரவர்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி அந்த வழிபாடு அமையும். காரைக்கால் அம்மையார் சிவபெருமானுக்குப் பாமாலை சூடும் திறமை உடையவர். அவர் அன்பினால், என்ன என்ன காரியம் செய்வார் என்பதைச் சொல்ல வருகிறார்.

அவர் நாவன்மை படைத்தவராதலின் அவனுக்குப் பாமாலை புனைந்து அணியும் ஆற்றல் படைத்தவர்; நாவினால் அழகிய பாமாலையைச் சூடுகிறவர். ஆதலின் முதலில் அதைச் சொல்கிறார்.

நாமாலை சூடியும்.

எல்லாரும் இப்படிச் செய்ய முடியாது. பூமாலை சூடலாம். அம்மையாரோ நாவினால் அழகையுடைய பூமாலையைச் சூடி இன்புறுகிறவர்.

“நாவிலே சித்ர மாகவே கட்டி... மாத்ருகா புஷ்ப மாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவேனோ” என்று அருணகிரியார் பாடுவார். அவ்வாறு நாவினால் அலங்காரமாகப் பாமாலை சூடும் பேறு பெற்றவர் அம்மையார்.

அன்பாய்
நாமாலை சூடியும்

என்கிறார்.