பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

523

அவருடைய நாவினால் பாமாலை சூடுவார்; இது வாக்கின் செயல். கையினால் பூமாலை புனைவார்; இது காயத்தின் செயல். வாக்கு, காயம் என்னும் இரண்டினாலும் இறைவனுக்கு மாலை புனைந்து வழிபடும் அவர் மனத்தினாலும் அவனையே தியானம் செய்கிறவர். அவனை எப்போதும் ஓர்கின்ற அறிவை உடையவர். நல்லவற்றையும் அல்லாதவற்றையும் சிந்திக்கும் இயல்புடையது மனம். நல்ல மனம் உள்ளவர்கள் நல்லவற்றையே எண்ணுவார்கள். அல்லாதவர்கள் அல்லாதவற்றையே நினைப்பார்கள். நாம் இரண்டு வகையான எண்ணங்களையும் உடையவர்கள். அம்மையாரோ எது எண்ணினாலும் அந்த எண்ணம் இறைவனோடு தொடர்புடையதாகவே இருக்கும். மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களாலும் அவனுடைய வழிபாட்டைச் செய்கிறவர் அவர்.

அவர் தம் அறிவினால் இன்னது செய்வதே நலம் என்பதை நன்கு அறிந்தவர். ஆகையால் வேறு எதை எதையோ பற்றிக் கொண்டு அல்லற்படும் அறிவு அவரிடம் இல்லை. இறைவனை எப்போதும் ஓரும் அறிவையே அவர் தமக்கு உரியதாகப் பெற்றவர்.

நாம்ஓர்
அறிவினையே பற்றினால்

உடம்பாலே வழிபடுவது எளிது; வாக்காலே வழிபடுவது அதைவிடச் சற்றுச் சிரமம் ஆனது. மனத்தாலே ஓர்ந்து தியானம் செய்வது அதைவிட அருமை. ஆனால் மெய்யன்பர்கள் மனத்தின் வழியே செல்லாமல், அதைத் தம் வழிபடுத்தி இறைவன்பால் ஈடுபடுத்துவார்கள்.

சிந்தனை நின்றனக்கு ஆக்கி

என்று மாணிக்கவாசகர் பாடுவார்.

அம்மையார் மூன்று காரணங்களையும் இறைவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்தியதால் அவருக்கு ஒரு தைரியம் பிறக்