பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

525

கொண்டு மயக்குவது போலத் துன்புறுத்தும் வினைகள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் அகன்று போகும். “எறிகின்ற வினை என்னும் இருள் நம்மை எவ்வாறு துன்புறுத்தும்? எதற்காகத் துன்புறுத்தும்?” என்று கேட்கிறார் அம்மையார்.

எற்றுஏது அடுமே
எறிவினையே என்னும் இருள்?

பாவங்களால் சூழப்பெற்றவர்கள் இருளில் வழி தெரியாமல் தடுமாறுகிறவர்களைப் போலக் கலங்குவார்கள். பாவங்களின் தொடர்பு இல்லாதவர்கள் ஒளியில் நடப்பவர்களைப் போல அஞ்சாமல் நடை போடுவார்கள். எங்கிருந்து எது வந்து தாக்குமோ என்று அஞ்சும் நிலை அவர்களுக்கு இல்லை. அந்த உறுதியான ஒளிநிலத்தில் நடை போடும் அம்மையார், 'வினைகள் நம்மை என்ன செய்யும்?' என்று கேட்கிறார்.

தம் நெஞ்சை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்கிறார். பாட்டில் நெஞ்சை விளிக்கும் விளி இல்லாவிட்டாலும் குறிப்பினால் அதை விளித்துச் சொல்வதாகக் கொள்ள வேண்டும். அவருக்கு நெருக்கமாக உள்ளது. ஆதலினால் அதனிடம் சொல்கிறார். "நெஞ்சமே, நீ அஞ்சாதே; நம்மை எது என்ன செய்யக் கிடக்கிறது?’ என்று பேசுபவரைப் போல அவர் சொல்கிறார்.

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்அடிக்கே
பூமாலை கொண்டு புனைந்துஅன்பாய் - நாம் ஓர்
அறிவினையே பற்றினால் எற்றுஏது அடுமே
எறிவினையே என்னும் இருள்?

[என்னுடைய நெஞ்சமே, நாம் நமக்கு உறவாகிய சிவபெருமானுடைய பொன் வண்ணத் திருவடிகளுக்கே நாவினால் அன்பால் பாமாலை சூடியும், பூமாலையைக் கொண்டு அலங்கரித்தும், அவனை நினைக்கும் அறிவினையே பற்றி வாழ்ந்