பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526

தால், பிறரை மோதித் துன்புறுத்தும் தீவினையாகிய இருள் நம்மை எவ்வாறு எதற்காக வந்து அடும்?

[நாமாலை - நாவினால் புனைந்து பாடும் பாமாலை, அன்பால் பொன்னடிக்கே என்பவற்றை நாமாலை சூட்டுவதற்கும் பூமாலை புனைவதற்கும் கொள்ளவேண்டும். நம் ஈசன் என்றது பக்தியினால் உண்டான உறவின் வலிமையைக் குறிப்பது. பொன் அடி - பொன் வண்ணத்தை உடைய அடிகள்; பொன்னைப் போல உள்ளத்தே பொதிந்து வைப்பதற்கு உரிய அடிகள், என்றும் பொலிவு பெற்ற அடிகள் என்றும் பொருள் கொள்ளலாம்; பொன் - பொலிவு. அடிக்கே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலை; வேறு எதையும் வழிபடாமையைக் குறித்தது. புனைந்தும் என்ற எண்ணும்மை செய்யுள் ஓசை நோக்கித் தொக்கது: செய்யுள் விகாரம். ஓர்தல் - இடைவிடாது நினைத்தல். அதைச் செய்வது அறிவு. அந்த அறிவைப் பற்றி, விடாமல் தியானிப்பது அன்பர் இயல்பு. எற்று-எவ்வாறு. இறைவனுடைய திருவடிகளையே வேறு பற்றறப் பற்றினவர்களுக்கு வினைகளால் உண்டாகும் துன்பம் இராது. ஒளிமயமான பொன்னடியைப் பற்றினவர்களை வினை என்னும் இருள் சாராது. விளக்கைப் பிடித்தவர்கள் இருளுக்கு அஞ்சாமல் இருப்பதுபோல அவர்கள் இருப்பார்கள். அடுமே, வினையே: ஏகாரம், அசைநிலைகள்.

‘அன்பாய் அடிக்கே சூடியும் புனைந்தும் பற்றினால் இருள் எற்று ஏது அடும்’ என்று கூட்டுக. எற்று - எப்படி. ஏது - எவ்வாறு, எதனால், எந்த அளவில் என்று பல வகையில் பொருள் கொள்ளலாம்.]

இறைவனை வழிபடுகிறவர்களுக்கு வினையினால் வரும் துன்பம் இல்லை என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் உள்ள 87-ஆவது பாடல் இது.