பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

633

இறைவனுடைய திருவடியைப் பற்றிக்கொண்டு, சலனமின்றி உள்ள சித்தம் படைத்த்தவர்கன் அன்பர்கள்.

“அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக” என்று இந்த நிலையைச் சேக்கிழார் செல்வார்.

அவ்வாறு சித்தத்தைச் சிவன்பாலே வைத்த அன்பர்களின் உள்ளம் தெளிவாக இருக்கும். அந்தத் தெளிவை உடைய சித்தத்திலே இறைவன் தங்கித் தன் வடிவத்தைத் தெளிவாகத் தரிசிக்கும் அருளைப் புரிவான்.

தெளிவு உள்ள சிந்தனையிற் சேர்வாய்?

இவ்வாறு இறைவனை விளித்த அம்மையார் அவனிடம் ஒரு வினாவை சமர்ப்பிக்கிறார்.

சிவபெருமாள் ஆலகால விஷத்தை உண்டவன். அந்த நஞ்சு பளபளவென்று நீல நிறமாக இருந்தது.

ஒளிநஞ்சம்

என்று அதைச் சொல்கிறார் அம்மையார்.

அந்தக் கரிய நஞ்சை இறைவன் வாங்கி உண்டான்; வாயில் இட்டு விழுங்கினான்; தன் கண்டத்தில் நிறுத்திக் கொண்டான். அங்கே அது நீல நிறத்தோடு நிற்கிறது.

“கறை நிறுத்திய கண்டன்”

என்பார் பரஞ்சோதி முனிவர்.

அவ்வாறு உண்ட நஞ்சம் கழுத்தில் நீல நிறத்தை உண்டாக்கியது. அதனால் இறைவனுக்கு நீலகண்டன் என்ற திருநாமம் உண்டாயிற்று.

இறைவன் அதை விழுங்கியபோது வாய் வழியாகத்தானே உள்ளே சென்றது? அப்போது அந்த வாயும் நீல நிறத்தை அடைந்திருக்க வேண்டுமே! தாம்பூலத்தை உண்ட