பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95. இணைப்புக் காரணம்


காரைக்கால் அம்மையார் இப்போது உமாதேவியைப் பார்க்கிறார். மற்றவர்களெல்லாம் தம் தேவிமார்களை நாவிலும் மார்பிலும் அருகிலும் வைத்திருக்கச் சிவபெருமான் தன்னுடைய திருமேனியில் ஒரு பாதியையே அந்தப் பெருமாட்டிக்கு வழங்கியிருக்கிறான். மாதிருக்கும் பாதியனாக உள்ள அவன் எப்போதும் அவளோடு இணைந்து ஒட்டி விளங்குகிறான். இந்த ஒட்டுறவைப் பற்றிய எண்ணம் அம்மையாருக்கு எழுகிறது.

இறைவனோடு பல வகையில் உரையாடும் இயல்புள்ள அம்மையார் உமாதேவிக்கும் எம்பெருமானுக்கும் உள்ள இணைப்பைப் பற்றி இப்போது சொல்கிறார். இறைவனை நோக்கி வினவும் முறையில் ஒரு பாட்டைப் பாடுகிறார்.

இறைவனை அவனுடைய வாகனத்தை முன்னிட்டு விளிக்கிறார். திருமால் இறைவனுக்கு வாகனமாக, விடைவடிவத்தில் விளங்குகிறான். திருமால், ‘மஞ்செனத் திரண்ட மேனி’ உடையவன். மஞ்சு—மேகம், மேகத்தைப் போன்ற நிறத்தையுடைய திருமாலைத் தன்னுடைய ஊர்தியாகிய இடபமாகக் கொண்டவன் இறைவன். இந்த அடையாளம் கூறி விளக்கினர்.

மஞ்சுபோல் மால்விடையாய்!

“தேவிமாரைப் படைத்தவர்கள் அவர்களுக்காகத் தனியே அந்தப்புரத்தைக் கட்டி அதிலே இருக்கச் செய்வார்கள். நெருங்கியிருக்க வேண்டுமானால் அருகே அமரச் செய்