பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

"யான் முற்பிறப்பில் தவஞ்செய்தேன்; அதனால் நல்ல நெஞ்சத்தைப் பெற்றேன்; அதனால் பிறப்பை அறுக்க எண்ணினேன்” என்று கூறுகிறார், முன்னையது காரணம்; பின்னையது காரியம் அல்லது விளைவு.

இவ்வாறு எண்ணுதற்குப் பயன் என்ன? இறைவனுக்கு ஆளாகல். பிறப்பறுக்க வேறு வழி இல்லை; இறைவனுக்கு ஆளாகி அவனடியைப் பற்றினால்தான் பிறவியினின்றும் மீள முடியும்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்"

என்று திருக்குறள் இதைத்தானே சொல்கிறது?

தவம் செய்வது அரும்பு; நன்னெஞ்சம் பெறுவது பூ; பிறப்பறுக்கும் எண்ணம் உண்டாவது காய்; இறைவன் அடியைப் பற்றிக்கொண்டு அவனுக்கு ஆளாவது கனி. கனி கைவரப்பெற்ற அம்மையார் முன்னை நிலைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கிறார்.

“யானே தவம்உடையேன்; என்னெஞ்சே நன்னெஞ்சம்;
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் யானே
............................................
அம்மானுக்கு ஆளாயி னேன்”

அம்மான் எத்தகையவன்? அம்மான்—தலைவன்; கடவுள்.

ஆணவத்தை யானையாக உவமிப்பது வழக்கம். இறைவன் கஜாசுரனை அழித்து அவனுடைய தோலைப் போர்த்துக் கொண்டான். தன்னை அடைந்தாரை ஆணவ முனைப் பிணின்றும் விடுபடச் செய்பவன் அவன் என்பதை அந்த ஆனைத்தோல் காட்டுகிறது. நீர்வேட்கை உடையவர்களுக்குத் தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர்ப் பந்தர் வைத்தவர்கள், "தண்ணீர் அங்கே கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகப்