பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

இறைவனுக்கு அடிமையானவர் இனிமேல் யார் வயிற்றிலும் பிறக்கமாட்டார்கள்.

"ஈன்றெடுப் பாள்ஒரு தாயும் இல்லை”

என்பது அபிராமி அந்தாதி. "எப்போது இறைவனுக்கு நான் அடிமை ஆனேனோ, அப்போதே இனிப் பிறவாத தன்மையை அடைந்துவிட்டேன். வேறு ஒருவர் என்னைப் பெறுகின்ற அவசியம் இல்லாத நிலை வந்துவிட்டது. யாராலும் பெறுவதற்கு அரிய நிலையை உடையேன் ஆயினேன்" என்கிறார் அம்மையார்.

இதற்குக் காரணம் என்ன? "என்னுடை முயற்சி அன்று, என்னுடைய தகுதியும் அன்று, இறைவனுடைய எல்லையற்ற அருளே இந்த அற்புதத்தை நிகழ்த்தியது” என்று சொல்ல வருகிறார். வேதியினால் தொட்ட மாத்திரத்திலே செம்பு பொன்னாகி விடுவது போல, அவனடி தொட்டு ஆளான மாத்திரத்தில் பிறவித்துன்பம் ஒழிந்துவிட்டது. செம்புக்கா பெருமை? வேதி செய்த மாற்றத்துக்கல்லவா பெருமை? இங்கே இறைவனுக்கு அடிமையானது பெரிது அன்று; அடிமையானவுடனே பிறவித் துன்பம் நீங்கியதுதான் பெரிது. அந்த விளைவு எதனால் உண்டாயிற்று? இறைவனுடைய திருவருளால், பிறப்பறுத்தது அற்புதம் என்றால், அந்த அற்புதத்தை நிகழச் செய்த இறைவன் திருவருள் அற்புதத்திலும் பெரிய அற்புதம்.

"அஃதன்றே ஆமாறு....அருள்!"

"அதுவல்லவா இறைவன் அருள் ஆமாறு” என்று வியக்கிறார்.

இறைவனை எப்படிச் சொல்கிறார்?

அவன் தூய்மையான புனலையுடைய கங்கையைத் தாங்கியிருக்கிறான். எல்லாவற்றையும் புனிதமாக்கும் தன்மையுடையது கங்கை. அதை ஆண்டவன் தலையில் தாங்கியிருக்