பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

கிறான். அவனுடைய தோற்றம் மாசுமறுவற்ற தங்கமலையாகிய மேருவைப்போல இருக்கிறது. அவன் திருக்கரத்தைப் பார்த்தால் அங்கும் தூய்மையைத் தரும் பொருளாகிய நெருப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் தூய்மைப் படுத்துவது தீ. தலையிலும் கையிலும் ஆண்டவன் தூய பொருள்களை, பிறவற்றைத் தூய்மையாக்கும் பொருள்களைத் தாங்கியிருக்கிறான். இரண்டும் ஒரே தன்மையுடையன அல்ல. ஒன்று தண்ணிய புனல்; மற்ரறொன்று வெவ்வியக் கனல். ஒன்று நனைத்துத் தூய்மையாக்கும்; மற்றென்று எரித்துத் தூய்மையாக்கும். ஒன்று கீழே இழிந்து சென்று தூய்மையாக்கும்; மற்மறொன்று மேலே எழுந்து தூய்மையாக்கும். இந்த இரண்டையும் தாங்கிக்கொண்டு பொன்மலையைப்போலத் தேசும் தூய்மையும் வடிவாக நிற்கின்றான் இறைவன்.

"புனற்கங்கை ஏற்றான்; ஓர் தூய பொன்வரையே போல்வான்;
அனற்கு அங்கை ஏற்றான்.”

[பரிசுத்தமுள்ள புனலாகிய கங்கையைத் திருமுடியிலே தாங்கியவன்; பொன்மலையாகிய மேருமலையைப்போல் தோன்றுவான்; அனலை அங்கையால் தாங்கினவன்.]

"அஃது அன்றே அருள் ஆமாறு" என்று வியக்கிறார். உலகில் ஒருவரை அண்டி நடையாக நடந்தால் ஏதோ சிறிதளவு பயன் கிடைக்கும். அவ்வாறன்றி அணுகியவுடனே முழுப்பயனும் கிடைத்தால் அது பெருவியப்பல்லவா? கொடுப்பானுடைய வண்மைத் திறத்தை அது காட்டும். அது போல, "நான் ஆளான அப்போதே பிறவித்துன்பம் போய் விட்டது. அதுதான் இறைவன் அருள் இருந்த வண்ணம்' என்று அம்மையார் வியப்பு மீதுாரக் கூறுகிறார்,

"ஆயினேன் ஆள் அவனுக்(கு), அன்றே பெறற்கரியன்
ஆயினேன்; அதன்றே. ஆமாறு-தூய
புனற்கங்கை ஏற்றான் ஓர் பொன்வரையே போல்வான்,
அனற்கங்கை ஏற்றான் அருள்!”