பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. எனக்கு அரியது உண்டா?


இனிய பொருள் எது?—இந்தக் கேள்விக்கு எல்லோரும் ஒரே வகையான விடையைத் தரமாட்டார்கள். சின்னக் குழந்தையைக் கேட்டால், "தித்திப்பான பண்டம் இனியது” என்று சொல்லும். புதிதாகத் திருமணம் செய்து கொண்ட ஒரு கட்டிளங் காளையிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், "என் காதலிதான் எல்லாவற்றிலும் இனிய பொருள்” என்று சொல்வான். இசையிலே விருப்பம் உடையவர்களை அணுகி இந்த வினாவைக் கேட்டால், "இசைதான் இனியது” என்பார்கள்.

இந்த இனிமை யாவும் நம்முடைய பொறிகளுக்கு இன்பம் தருபவை. செவிக்கு இனிய இசையும் நாவுக்கு இனிய உணவும் கண்ணுக்கினிய காட்சியும் நாசிக்கினிய நறுமணமும் உடம்புக்கு இனிய மெத்தையும் இனிமையான பொருள்கள் என்றே மக்கள் உணர்கிறார்கள். ஆனால் அந்த இனிமையைப் பொறிகள் வாயிலாக நுகர்கிறார்கள்.

பொறிகளின் வாயிலாக அந்த இனிமைப் பொருள்களால் உண்டாகும் இன்பம், மனத்தைச் சார்கிறது. உண்மையில் மனந்தான் இன்பம், துன்பம் என்னும் அநுபவங்களைப் பெறுகிறது; ஐம்பொறிகளின் வாயிலாக அவற்றை அடைகிறது. மனத்தின் தொடர்பு இல்லாவிட்டால் பொறிகள் இன்ப துன்பத்தை நுகர முடியா. மயக்க மருந்து கொடுத்தபிறகு அறுவை மருத்துவம் செய்கிறார்கள். அப்போது துன்பம்