பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தெரிவதில்லை. அறுக்கும் உடம்பில் உயிர் இருக்கிறது என்றாலும் மனத்தோடு உள்ள தொடர்பு அப்போதைக்கு இல்லை; அதனால் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாகும் மனிகன் அந்தத் துன்பத்தை அப்போது உணர்வதில்லை.

ஒரு குமரன் அயர்ந்து தூங்குகிறான். அவனருகில் ஒருவன் இனிமையாகப் பாடுகிறான். அந்தப் பாட்டை அவன் கேட்பதில்லை. செவிகள் திறந்திருந்தாலும், தூக்க நினையில் அவற்றோடு மனம் தொடர்பு பெறாதமையால் அவன் கேட்ப தில்லை. ஒரு நண்பன் அவனை அணைக்கிறான். அதையும் அவன் உணர்வதில்லை.

ஆகவே இன்பம், துன்பம் என்ற இரண்டும் மனத்தினல் நுகரப்படும் நுகர்ச்சிகள் என்பது தெளிவாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து வகையான நுகர்ச்சிகளையும் ஐம்பொறி வாயிலாக உணர்ந்த மனம் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறது. அவ்வாறு உண்டாகும் இன்பத்துக்குக் காரணமாக உள்ள, பொறிகளின் வாயிலாக இன்பத்தைப் புகுத்துகிற பொருள்களே இனிய பொருள்கள் என்று சொல்கிறோம்.

சில சமயங்களில் என்றோ நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைத்து இன்புறுகிறோம். அப்போது அந்த இன்பத்துக்குக் காரணமாக இருப்பது பழைய அநுபவத்தின் நினைவு. அந்த நினைப்பை நினைக்கும்போது பொறிகளின் உதவி வேண்டியிருப்பதில்லை. மனம் தன்னுள்ளே புதைந்து கிடந்த அநுபவத்தை வெளிக் கொணர்ந்து சுவைக்கிறது. இலக்கிய இன்பம் நினைவினால், எண்ணத்தால், சிந்தனையால் உண்டாவது. இலக்கியத்தில் வரும் காட்சிகளை நாம் நேரில் பார்க்காவிட்டாலும் கற்பனை செய்து இன்பம் காணுகிறோம். அப்போது அந்தக் கற்பனைக்கு இந்தப் பொறிகள் துணையாக இருப்பதில்லை. பலகாலமாக அநுபவித்த அநுபவங்களின் உறைப்பினாலே மனமே ஒரு கண்ணைப் படைத்துக்கொண்டு அகத்திலே ஒரு காட்சியைக் கண்டுகளிக்கிறது; செவியைப் படைத்துக் கொண்டு இசையைக்