பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

நினைந்து ஈடுபடுவது அன்பர்களின் செயல். அவர்கள் தம் கருவி கரணங்களையெல்லாம் அவனிடத்தில் ஈடுபடுத்துவார்கள். அவன் திருவுருவத்தைக் கண்டும், அவன் புகழைக் கேட்டும், அவன் பிரசாதத்தை உண்டும், அவனை அருச்சித்த மலரை மோந்தும், அவன் திருக்கோயிற் காற்றை நுகர்ந்தும், இன்புறுவார்கள். அவன் கோயிலைக் காலால் வலம் வந்து மகிழ்வார்கள். அவனைக் கையால் தொழுது உவகை அடைவார்கள். மனத்தால் அவனைத் தியானித்து அமைதியும் இன்பமும் அடைவார்கள்.

இத்தகைய நிலைகளையெல்லாம் அநுபவத்தில் உணர்ந்த காரைக்கால் அம்மையார் தம் அநுபவத்தைப் பாடுகிறார்.

"எனக்குத் தலைவனாகிய பரமசிவன் எனக்கு இனியன்: என் உயிருக்கு இனியன். எனக்கு மட்டுமா? எல்லா உயிருக்கும் இனிய சர்வேசுவரன்” என்று தொடங்குகிறார்.

"எனக்கு இனிய எம்மானை ஈசனை”

எதை எதையோ நினைத்துக் கவலையை அடைவது மனிதர்களின் இயல்பு. கண்ட கண்ட பொருள்களையெல்லாம் தன் கையிலுள்ள அழுக்குப் பாத்திரங்களில் போட்டுவைத்துக் கொள்ளும் பைத்தியக்காரனைப் போல நாம் இருக்கிறோம். நம் மனம் அழுக்குக் கூடையாக, குப்பைத் தொட்டியாக இருக்கிறது. அதைக் கிளறக் கிளறக் குப்பையே வருகிறது.

பெரியவர்கள் உள்ளம் அப்படி இராது. தாம் பயன் படுத்தும் அறையை அடிக்கடி தூய்மைப்படுத்து வதைப் போல, அவர்கள் அடிக்கடி மனத்தை அப்பியாசத்தால் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில் அழுத்தமான ஆசை இருக்கும். அவர்கள் வெவ்வேறு பொருள்களைப்பற்றி எண்ண மிட்டாலும், ஆசைப்படும் அந்தப் பொருள் அடிக்கடி

நா.—5