பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூழ்கினான். குடம் தட்டுப்பட்டது. அதை எடுத்துக்கொண்டு வந்தான்.

குடம் அவனது உடைமை. அதற்கு அவன் உடையவன். குடம் ஒரு முறைதான் முழுகியது. அதை எடுக்கப் புகுந்தவனாே ஒன்பது முறை முழுகினான். இதை, "உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு” என்று சொல்வார்கள். இறைவன் உடையவன். நாம் அவன் உடைமை நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று அவனுக்கு உள்ள கருணை நாம் அவனுக்கு ஆளாக வேண்டும் என்று நமக்குள்ள ஆர்வத்தைவிடப் பன்மடங்கு அதிகமானது.

நாம் அவனுக்கு ஆள் என்று நினைக்காவிட்டாலும் அவன் நமக்குப் பிரானாகத்தான் இருக்கிறான். 'இறைவன் இல்லை என்கிறேன். அவன் உண்மையில் இருப்பனானால் என் தலைமேல் இடி விழச் செய்யட்டும்” என்று சிலர் கொக்கரிக்கிறார்கள். அது கண்டு ஆண்டவன் கோபம் கொள்வதில்லை. அவர்களுடைய அறியாமையைக் கண்டு தனக்குள்ளே நகைத்துக் கொள்கிறான். உடம்புக்கு ஆகாதென்று, தான் வேண்டுமளவு தின்பண்டத்தைத் தாய் தராவிட்டால் குழந்தை, "உன்னைக் குத்துவேன்; கொல்லுவேன்” என்று சொல்கிறான். அதைக் கேட்டுத் தாய் நடுநடுங்கி, "ஐயோ! போலீஸ்காரரைக் கூப்பிடுங்கள்” என்றா சொல்வாள்? அவன் வார்த்தைகளைக் கேட்டு அவள் சிரிப்பாள். ஆண்டவனும் தாயைப் போலத்தான் நம்முடைய அறியாமையை கண்டு சிரித்துக்கொண் டிருக்கிறான்.

ஆயினும் தாய்க்குத் தன் குழந்தை திருந்தவேண்டும் என்ற எண்ணம் வன்மையாக இருப்பது போல இறைவனாகிய பிரானுக்கு நாம் அவனுக்கு ஆளாகி நலம் பெறவேணடும் என்ற ஆர்வம் மிகுதியாக இருக்கிறது. ஆகவே நாம் அவனைப்

நா. 6