பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார் அம்மையார். 'கொன்றை மலரை அணிந்தவன்; நெற்றிக்கண்ணை உடையவன்; அவன் இயல்பு அதுமட்டுந்தானா?’ என்று கேட்கிறார். அதுவே பிரானானவாறு; அதுவே உட்கொள்ளுமாறு’ என்று என்று சொன்னேன். ஆனால், அதுமட்டுமா அவன் பெருமை' என்று பாட்டிலே கேட்கிறார்.

"அதுவே பிரானாமாறு: ஆட்கொள்ளுமாறும்
அதுவே இனிஅறிந்தோம்; ஆனால்-அதுவே
பனிக்கு அணங்கு கண்ணியார், ஒள்நுதலின் மேல்ஒர்
தனிக்கண் அங்கு வைத்தார் தகவு?

[அவர் தலைவராகும் வண்ணம் அதுதான்; அவர் அடியவரை ஆட்கொள்ளுமாறும் அதுதான்; இவ்வுண்மையை இப்போது அறிந்தோம்; ஆனால், பனிக்கு வாடும் கொன்றை மாலையை அணிந்தவரும்; விளக்கமான நெற்றியின்மேல் ஒப்பற்ற ஒற்றை கண்ணைப் படைத்துவருமாகிய சிவபெருமானுடைய பெருமை அதுமட்டுமா?

பிரான்-தலைவன், உபகாரி, முன் இரண்டு ஏகாரங்கள் தேற்றம்; பின் உள்ளது வினா. அணங்கு-துன்புறும்; வாடும். கண்ணி-தலையில் அணியும் அடையாள மாலை. நுதல்-நெற்றி. நுதல்மேல் அங்கு வைத்தார். தகவு-தகுதி; பெருமை.]

இறைவன், “உணர்ந்தார்க்கு உணர்வரியோன்” என்று பாடுவார் மாணிக்கவாசகர். அப்படி, தாம் உணர்ந்ததாகச் சொல்லி உருகிய அம்மையார், என்ன உணர்ந்து விட்டோம் என்று பிறகு அடக்கத்துடன் சொல்கிறார். முன் பகுதியில் பெருமிதமும் பின்பகுதியில் அடக்க உணர்வும் புலனாகின்றன.

இது காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத்திருவந்தாதியில் பன்னிரண்டாம் பாட்டு.