பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

அவள் நெருங்கி வந்து எனக்குப் பக்கத்தில் அமர்க் தாள். தழுவல் புரியும் பாவனையில் என் கண்களையே உற்று கோக்கிக் கொண்டிருந்தாள். 'நாம் எதைப் பற்றிப் பேசலாம்? காதல்? கவிதை? ஓ, என் ஆல்பிரட் தெ. முஸ்ஸே! ...... என் லீகாண்ட் தெ லிஸ்லே! ...... ரோஸ் டாண்ட்!” அவள் கண்கள் புருவங்களை நோக்கி மேலேறி உருண்டன. ஆணுல் அவளுடைய தலைக்கு உயரே இருந்த ஜெர்மானியனின் பற்களேப் பார்த்ததும் அவள் உடனடி யாகத் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.

அவள் கவிஞர்களேப் பற்றிப் பிதற்றிக் கொண்டிருந்த போது நான் அவளேத் தடுக்கவில்லை. அவள் வட்டிக் கடைக்காரர்களேப் பற்றிப் பேசத் தொடங்கும் தருணத் திற்காக நான் மெளனமாய்க் காத்திருந்தேன். ஒரு காலத் தில் உலகத்தில் இருந்த வீரர் ஒவ்வொருவரும் தமது இதயத்தில் எவளுடைய உருவத்தை வைத்துப் போற்றி ஞர்களோ, அந்த மங்கையை நான் கவனித்தேன். அவளுடைய முகம் அளவுக்கு அதிகமாகக் காதல் புரிந்த ஒரு பெண்ணின் ஆரோக்கியமற்ற முகமாகத் தோன் நியது. அதன் பிரகாசமான நிறம் ஆயிரம் ஆயிரம் முத்தங்களிளுல் தேய்ந்து மங்கிப்போய் விட்டது. திறமையோடு மை திட்டப்பெற்ற கண்கள் அமைதியற்று, பொருளுக்குப் பொருள் தாவிக்கொண்டிருந்தன. இமை ரோமங்கள் சோர்ந்து தாழ்ந்து,கனத்த கண் விளிம்புகளே மூடி மறைத்தன. அவளது கன்னப் பொறிகளிலும் கழுத்திலும் கிடந்த சுருக்கங்கள் அவளுடைய உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொக்தளிப்புகளின் மெளனமான சாட்சிகளாக விளங்கின. ஊதியிருந்த அவள் தொண்டை யும் மோவாயும்-கொழுப்பேறிச் சீர்கெட்டுப்போன இதயத் தைப் பற்றிக் கூறின. அவள் தளர்ந்து கனத்து வளர்ந் திருந்தாள். இந்தப் பெண்ணுக்கு ஆத்மாவின் உயர்ந்த