பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ் f

கவிதையைப் பார்க்கிலும் வயிற்றின் கவிதைதான் மிக அருமையானது என்பது தெளிவாகத் தெரிந்தது. முன்பு ஒரு சமயம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும்படி அவள் உதடுகளிலிருந்து பிறந்த உண்மை, சுதந்திரம் ஆகியவற்றின் குரலேவிட, குடல்களின் ஒழுங்கற்ற கூச்சல்தான் அவளிடம் உரத்துப் பேசியது என்றும் எனக்குப் புரிந்தது. முன்னர் அவளிடமிருந்த லலிதத்துக் கும் துவட்சிக்கும் பதிலாக, சங்தைக்காரிக்குப் பழக்கமாகி விட்ட பகட்டு, உலகச் சந்தையில் சில்லறைக் கடைக்காரி ஆகிவிட்ட அவளிடமும் காணப்பட்டது. மனித குலத்தின் இன்பத்துக்காகப் போராடிய ஒரு மகா வீரநாயகிக்கு உரிய வசிகரம், எண்ணற்ற காம விளையாடல்களின் நாயகியாக மாறியுள்ள மூதாட்டியின் வெறுக்கத் தகுந்த தளுக்குக் குலுக்குக்கு இடமளித்து விட்டு மறைந்து போயிற்று. - w

அவள் அழுத்தமான கறுப்பு நிற மேலங்கி அணிக் திருந்தாள். அதில் ஐரிகை அலங்காரம் செய்யப்பட்டிருக் தது. நியூயார்க் நகரில் உள்ள சுதந்திரச் சிலே மீது படிங் திருந்த தாமிரக் களிம்பையும், உண்மையின் சக்தி செய்த வஞ்சனேயின் காரணமாகத் தும்பு தும்பாகக் கிழிந்து விட்ட அனுதாபங்களேயும் தான், அது எனக்கு ஞாபகப் படுத்தியது.

அவளுடைய குரல் சோர்வுற்று ஒலித்தது. தன்னலம் கருதாத உணர்வுகளுக்கு இனி இடமில்லை என்ருகி, மரத்துப் பாழடைந்து விட்ட அவளுடைய உள்ளத்திலே கூட, எப்பொழுதாவது கினேவு எனும் ஊசியால் குத்துகிற முக்கியமான எதையோ, திே கியாயமான எதையோ, மறப்பதற்காகத் தான் அவள் பேசிக் கொண்டிருந்தாள் என்று எனக்குத் தோன்றியது.