பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ் #3

மாளிகையின் வலிமைக்கு அதிக வலுச் சேர்க்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. மக்கள், அம்மாளிகை சிற்பதற்கு உரிய இடம்தான். புரட்சிக்காரர்கள் வெறும் வெறியர் களே யாவர். இந்த உவமையைத் தொடர்ந்து கூறுவ தானல், மாளிகையில் குடியிருப்பவர்களின் அமைதியையும் உடைமையையும் பாதுகாக்கும் வேட்டை நாய்களின் கூட்டம்தான் இராணுவம் என்று குறிப்பிடலாம்,...'

அதில் ஷைலக்குகள் வசிக்கிருர்களாக்கும்?"

"அவர்களும், அக் கட்டிடம் வசதி நிறைந்தது என்று கருதும் எல்லோரும்தான். ஆனல் அந்த விவகாரம் கமக்கு எதற்கு அரசியல் லாபகரமாக இல்லாத போது, அலுப்புத் தருவதாகி விடுகிறது.”

கான் எழுந்து அமைதியாகத் தலை வணங்கினேன்.

அர்ே போகப் போகிறீராக்கும்?' என்று அலட்சிய மாய்க் கேட்டாள் அவள்.

"இது எனக்கேற்ற இடமல்ல' என்று சொல்லி விட்டு, ஜாரையும் பாங்கு முதலாளிகளேயும் கூட்டி வைப்பவளாகி விட்ட அவளைப் பிரிந்து சென்றேன்.

நான் யாரைக் காண வங்தேனே அந்த பிரான்ஸைப் பார்க்கவில்லை. அவளுக்குப் பதிலாக, கோழைத் தனமும் குற்றம் காணும் குணமும் பெற்ற ஒய்யாரக் காரியையே கண்டேன். அவளோ நாணயமற்ற முறையிலும், உணர்ச்சி யற்ற தன்மையிலும், பணத்துக்காகத் திருடர்களிடமும் துரக்கிலிடுவோரிடமும் தன்னேயே ஒப்படைக்கும் சுபாவம் பெற்றவளாக இருந்தாள்.

நான் பாரிஸ் நகர வீதிகளில் நடந்தேன். கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த போர் வீரர்கள்-பேராசை பிடித்த