பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறந்த புத்தகம்

வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த மனிதர்கள் -எல்லோரும் சமமான அறிவுடையவர்கள்தான்-எவ்வாறு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டார்கள்; கோயில் களேயும், மாளிகைகளையும், வீடுகளையும் குப்பை மேடு களாக மாற்றியும், நகரங்களேயும், கிராமங்களேயும், கொடி முந்திரித் தோட்டங்களேயும் பாழ்படுத்தியும் தங்களுடைய கடுமையான - மிக உயர்ந்த - உழைப்பின் பலன்களே எல்லாம் எவ்வாறு அவர்கள் நாசப்படுத் தினர்கள்; தங்கள் முன்னேர்களால் சிறப்பாக உழுது பண்படுத்தப்பட்ட ஆயிரமாயிரம் ஏக்கர் கிலத்தை அவர்கள் எவ்விதம் பாலைகளாக்கினர்கள்; பல்லாண்டு பல்லாண்டாக அவை எல்லாம் இரும்புச் சிராய்களின் குவியல்களினலும், படுகொலே செய்யப்பட்ட குற்றமற்ற மக்களின் சதை அழுகிய விஷம் கலந்தும் எவ்வாறு விளங்கும் என்பதுபற்றி இந்தப் புத்தகம் (ஹென்ரி பார்புஸ்ஸேயின் தீ நடுவே"-"under fire") தெளிவாகவும் ஆணித்தரமாகவும், உண்மை ஒளியுடன் எடுத்துரைக் கின்றது. - - -