பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

மனிதரை அஞ்சி கடுங்கும் அற்பக் கருவிகளாகவும், தனது கொலேகார இலட்சியங்களுக்குப் பயன்படும் படியாக ஆரக்க சக்தி ஒன்று உற்பத்தி செய்த அருவருக் கத் தகுந்த இயந்திரங்களாகவும் மாற்றுகிற, ஒரு காசகார முரண்பாடு கம்மிடையே இருக்கிறது. இந்த முரண்பாடு கேலியும் கிண்டலுமாக இந் நூலில் ஒளிர்கின்றது.

மகிழ்ச்சியற்ற வீரர்கள், இக் நூலில் கம் இதயத்தைத் தொட்டு அனுதாபத்தைத் தூண்டுகிருர்கள். ஆனால், உண்மையில் அறிவுக்கும். இச்சைக்கும் இடையே ஒரு பொழுதும் ஒத்துப்போக முடியாதபடி விளங்கும் முரண் பாட்டை உடைய குஷ்டரோகிகளேப் போல்தான் அவர்கள் காணப்படுகிருர்கள். ஏற்கனவே அவர்களுடைய அறிவு, வெறுப்பூட்டும் இக் கொலேயை முடிவு கட்டக் கூடிய, உலகம் முழுவதும் பரவியுள்ள இக் குற்றத்தை கிறுத்தக் கூடிய பலத்தையும் உறுதியையும் பெற்றிருப் பதாகத் தோன்றுகிறது. ஆல்ை, அவர்களிடம் இச்சா சக்தி இல்லை. மனிதக் கோலேயின் சண்டாளத்தனம் அனைத்தையும் அவர்கள் உணர்ந்து தங்கள் உள்ளத்தில் அதை வெறுத்த போதிலும், அவர்கள் இன்னும் கொன்று கொண்டும், அழித்துக் கொண்டும், இரத்தத்திலும் சேற்றிலும் செத்துக்கொண்டும் தான் இருக்கிருர்கள்.

" கம்மைக் கொண்டு தான் அவர்கள் சண்டை போடுகிரு.ர்கள் என்று அவர்கள் சொல்கிருர்கள். சண்டைக்கு உரிய சாதனங்களாக அமைவது காம்தான். சாதாரன வீரர்களின் தேகங்களையும் ஆத்மாக்களையும் கொண்டு தான் யுத்தம் கடைபெறுகிறது. பினங்கள் கிடக்கும் கிலப் பரப்பையும் இரத்த ஆறுகளேயும் ஆக்குவது நாமே தான். நாம் எல்லோரும், நம்மில் ஒவ் வொருவரும், அருவங்களாகவும் பேசாதவர்களாகவும் இருக்கிருேம். ஏனெனில், காம் எண்ணிக்கையில் மிகப்