பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

இன்று சோஷலிஸ்ட் சோவியத் யூனியனேத் தாக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தோடு ஒரு யுத்தம் நடத்த ஐரோப்பிய முதலாளிகள் மீண்டும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிருர்கள். அவர்கள் இந்த யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தமக்குள் ஒன்றுபட்டாக வேண்டும். அவர்களில் மிகவும் வெட்கங்கெட்டும் அறிவற் றும் விளங்குகிற கும்பல், நெப்போலியன் காட்டிய வழியைப் பின்பற்றுவதன் மூலம் ஒற்றுமையைரிலே காட்டி விடலாம் என்று எதிர்பார்க்கிறது. தனக்கு அயலில் இருப்பவர்களேத் தாக்குவதும்; அப்புறம் தோல்வியுற்ற வர்களின் கழுத்தைப் பிடித்து சோஷலிஸ்டு ராஜ்யத்தின் மீது மோதும்படி தள்ளுவதும் தான் அந்த வழியாகும், இது தெளிவும் எளிமையும் கிறைந்த திட்டம் தான். இந்தத் திட்டம் தான் எனக்குக் கழுதைகளே ஞாபகப் படுத்தியது!

கழுதைகளின் அவமானகரமான பங்கை 1914- 18 யுத்தத்தில் கிறைவேற்றியவர்கள், காம் அறிந்தபடி, ஜெர்மன் சோஷியல் டெமாக்கிரட்டுகளின் தலைவர்கள், ரவிய மென்ஷ்விக்குகள், எஸ். ஆர். கள் குட்டி முதலாளிகளின் தலைவர்கள் பலரும் தான். இவர்களைத் தான் இந்தப் பதினேந்து வருஷகாலமாக முதலாளிகள் பாளிஸ்டுகளாய் உருவாக்கிக் கொண்டிருக்கிருர்கள்.

இந்த கோக்கிலிருந்து கவனிக்கும் போதுதான், பார்புஸ்ஸேயும் அவரைப் போன்ற உணர்வுள்ள பிற எழுத்தாளர்களும் எழுதிய நூல்களின் சோஷலிசப் புரட்சி ரீதியான மதிப்பு, மிகத் தெளிவாகவும் வெளிப் படையாகவும் எனக்குத் தோன்றுகிறது. இந்தப் பதினைந்து வருவு காலத்தில், பல்லாயிரக்கணக்கான யுத்தவெறியரின்