பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 65

பற்றியும் இதையே தான் கூற வேண்டும். அதிமனிதன்' அவதரிக்க வேண்டும் என்கிற முதலாளி வர்க்க ஏக்கத்தைப் பிரதிபலிப்பவர் இவர். இங்த் ஏக்கத்தைப் பிரதிபலிப்பவர் கள் மகா பிரெடரிக் மன்னனே வீரனுக ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அக்கருத்துச் சீரழிந்து பிஸ் மார்க்கையும், மந்த புத்தியுடைய இரண்டாவது வில்ஹெல்ம் மன்னனையும் வீரர்களாக்கியது. கடைசியில், பைத்தியக்காரனை ஹிட்லரைத் தலைவனுக ஏற்றுக் கொண்டு விட்டது. -

முதல் இருபது வருடகாலம் ஐரோப்பிய முதலாளி களுக்கு ஒரு மாவீரனின்'எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவன் நெப்போலியன் போனபார்ட்; இவனேச் சிறிய தளபதி என்று அழைப்பார்கள். ஒரு மாவீரன் மீது கம்பிக்கை வைப்பது மத்தியதர வர்க்கத்தினருக்கு எவ்வளவு அவசியமானது என்பதையும், அந்த வீரனின் வீழ்ச்சி எவ்வளவு ரிச்சயமானது என்பதையும் திட்டமாகவும் அழுத்தமாகவும் தன் வாழ்க்கையின் மூலம் எடுத்துக் காட்டியவன் போனபார்ட் தான். என்ருலும் கூட, அவனுடைய விபரீதமான போக்கு, பல தலைமுறைகளுக்கு மத்தியதர வர்க்கத்தினரின் எண்ணங்களேயும், அபிப் பிராயங்களையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பற்றி வேண்டிய அளவு ஆராய்ச்சி செய்யப்படவில்ல்ே.

சரித்திரத்தை நிர்மாணிப்பவன் என்கிற முறையில், விரனின் பாத்திரம் என்ன என்பது பற்றிய மிகவும் அலங்காரமாகவும் ஓரளவு உணர்ச்சி வெறியோடும். கார்லேல் ஆராய்ந்து எழுதியுள்ளார். -

அவர் கூற்றை அனைவரும் கம்பின கிளமன்சோ, சர்ச்சில், உட்ரோ வில்சன், இன்னும் இவர்களைப் போன்ற இதர.