பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 69

னுடைய கலாசார வளர்ச்சியின் வரலாற்றிலே தாமதம் விளைவுக்கும் ஒய்வு காலமாகப் புரட்சிகள் ஒருபோதும் விளங்கியதில்லை. உண்மையில் புரட்சியானது புதிய ஆக்க சக்திகளேத் தோற்றுவிப்பதற்குக் காரணமாகத்தான் இருக் திருக்கிறது. -

ரோமனேவ் ஜார் அரசர்களும், அரைகுறைப் படிப்பு பெற்ற சில்லறை வியாபாரிகளும் ரஷ்ய காட்டின் பொக்கிஷங்களே ஐரோப்யிய முதலாளிகளுக்குப் பண்ட மாற்றுச் செய்து வாழ்ந்தார்கள். பாட்டாளிகளையும் தொழிலாளிகளேயும் கொள்ளேயடித்து வந்தார்கள். அறி வொளியை அனேக்கும் குணமுடைய மூட மதகுருக்களின் கைப்பாவைகளாக மாறினர்கள். அத்தகையோரின் செல்வாக்கு மேலோங்கி யிருந்த பழைய ரஷ்யாவின் எல்லேகளுக்குள் இப்பொழுது கலாசாரப் புரட்சிச் செயல் முறை, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் எனது வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். விஷயம் தெரிந்த உண்மையான சாட்சி என்ற தகுதியை எனக்கு என் வாழ்வு அளிக் கிறது.

சுமார் ஐம்பது வருட காலம் நான் பல வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளைக் கவனித்து வந்திருக்கிறேன். எனது உடனடியான அபிப்பிராயங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்து விடாமல் என் காட்டு மக்களின் வரலாற்றைப் படித்து, மேல் காட்டு மக்களின் சரித்திரத்தோடு ஒப்பு நோக்கினேன். நடுவு கிலேமையோடு நான் ஆராய்ந்தேன். மன உணர்வுகளே விலக்கி விட்டு வெறும் நடுவு நிலைமையோடு ஆராய்வது, வாழ்வின் சாதாரண உண்மைகளைக்கூட உணர்ந்து கொள்ள விடாமல் என்னேத் தடுக்கிறது; சேர்வழியில்