பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 73

எனப்படும் மக்களின் பள்ளிக்கூடங்களுக்குப் போட்டி யாக அமைக்கப்பட்ட இப் பள்ளிக்கூடங்களில் கிராமப் பாதிரிகளே ஆசிரியர்களாகப் பணி புரிந்தார்கள். இவற். ருேடு கூட, விவசாயி சம்பந்தமாக இலக்கியக் கண்ணுேட் டத்தில் கூரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது. இலக்கிய உலகில் மென்மையான இதயம் பெற்ற, இசை மயமான, கனவு காணும் சுபாவமுடைய விவசாயி மறைந்து விட் டான். செகாவும், பூனினும் மற்றுமுள்ள எழுத்தாளர் களும் சித்திரித்த முரட்டுத் தனமான, மதுவில் மூழ்கி கனேந்த, விசித்திரமான விவசாயிகள் தோன்றினர்கள்.

யதார்த்த வாழ்வில், அப்பொழுது இத்தகைய மாறுதல் ஏற்பட்டது என்று எண்ணுவதற்கு கான் தயாராக இல்லே. ஆனல், இருபதாம் நூற்ருண்டின் ஆரம்ப கால இலக்கியத்தில் இம் மாறுதல் ஏற்படத் தான் செய்தது. இந்த இலக்கிய உருவ மாற்றம், கலே சமூகத்தை விட்டுத் தனித்து நிற்பது என்கிற கொள் கைக்கு மிகுதியும் ஆதரவான அபிப்பிராயத்தைத் தர வில்லை. ஆணுல், சுதந்திர மனோபாவம் பெற்ற தனிமனிதன்' குரலுக்கும் அவனுடைய வர்க்கத்தின் குரலுக்கும் உள்ள ஒற்றுமையைத்தான் இது வெகு அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறது. அறிவுறுத்தி இணங்க வைக்கும் எண்ணத்துக்குப் பதிலாக, இணங்கி நடந்து மகிழ்விக்கும் எண்ணம் இருப்பதையும் இது காட்டுகிறது.

ஆகவே, இருபதாம் நூற்ருண்டில் விவசாயியைப் பற்றி மிகவும் கவர்ச்சியற்ற இலக்கியச் சித்திரத்தைத் தான் முதலாளிகள் பெற்றிருந்தார்கள். 1905-0 ஆண்டு களில், இச் சித்திரத்துக்கு உரிய மூல புருஷன் (விவசாயி) கிலத்தைத் தனது சொந்த உபயோகத்துக்காக படுத்தத் தீர்மானித்து, நிலப்பிரபுக்களின் மாளிகை